ஒரே கையெழுத்து.. நாடு முழுக்க பல ஆயிரம் பேருக்கு வேலை.. மோடி எடுத்த முக்கிய முடிவு! சிக்ஸர்!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, ரோஜ்கர் மேளா திட்டத்தின் 17வது தவணையின் கீழ், 51,000க்கும் அதிகமானவர்களுக்கு அரசுப் பணிகளுக்கான பணி நியமனக் கடிதங்களை நாளை வழங்கவுள்ளார். நாடு முழுவதும் நடத்தப்பட்ட ரோஜ்கர் மேளாக்கள் மூலம் இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வேலை தேடுபவர்களையும், வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் நிகழ்வே ரோஜ்கர் மேளா எனப்படுகிறது. மத்திய அரசு சார்பாக இந்த நிகழ்வு நடத்தப்படும். நாட்டில் வேலைவாய்ப்பு முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக, இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் (MSDE) கீழ் இயங்கும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (NSDC), நாடு தழுவிய அளவில் வேலைவாய்ப்பு மேளாக்களை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நிகழ்வுகள் வேலையில்லாத இளைஞர்களை தனியார் துறையில் பொருத்தமான வேலை வாய்ப்புகளுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

தமிழ்நாட்டில் நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம் போன்றது ஆகும் இது. இதன் முக்கிய நோக்கம், வேலை தேடுபவர்களையும், வேலை வழங்குபவர்களையும் விரைவாக இணைப்பதாகும். இதன்மூலம் வேலைவாய்ப்பு செயல்பாடுகள் துரிதப்படுத்தப்படுகின்றன.
மோடி வேலைவாய்ப்பு
பொதுவாக, ரோஜ்கர் மேளாக்கள் பெரிய கூட்ட அரங்குகளில் நடைபெறும். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்தனி ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த ஸ்டால்களின் முன்பாக, நிறுவனத்தைப் பற்றிய தகவல்களையும், விளம்பரத் தாள்களையும் காட்சிப்படுத்தும் மேசைகள் இருக்கும்.
ஒவ்வொரு ஸ்டாலிலும் பல நிறுவனப் பிரதிநிதிகள் இருப்பார்கள். இவர்கள் வேலை தேடி வரும் நபர்களுடன் நேரடியாகப் பேசுவார்கள். சில நிறுவனங்கள் தங்கள் ஸ்டால்களை பதாகைகள் மற்றும் விளம்பர பலகைகள் மூலம் கவர்ச்சிகரமாக அலங்கரிக்கும்.
இந்த மேளாக்களின் அளவு 5 முதல் 100 நிறுவனங்கள் வரை மாறுபடும். நூற்றுக்கணக்கான வேலை தேடுபவர்கள் இதில் பங்கேற்பார்கள். சிறிய ரோஜ்கர் மேளாக்களில்கூட, நிறுவனப் பிரதிநிதிகளைச் சந்திக்க வேலை தேடுபவர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைப் பார்க்க முடியும்.
மோடி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை
பிரதமர் நரேந்திர மோடி, ரோஜ்கர் மேளா திட்டத்தின் 17வது தவணையின் கீழ், 51,000க்கும் அதிகமானவர்களுக்கு அரசுப் பணிகளுக்கான பணி நியமனக் கடிதங்களை நாளை வழங்கவுள்ளார்
நாடு முழுவதும் பல இடங்களில் நடைபெறும் இந்த நிகழ்வுகளில் பிரதமர் காணொளி வாயிலாக பங்கேற்று, அஞ்சல் துறை மற்றும் பிற அரசுத் துறைகளுக்கான பணி நியமனக் கடிதங்களை வழங்குவார். இந்த நிகழ்ச்சி மூலம் இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் அஜய் தம்டா ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.
பலருக்கு வேலைவாய்ப்பு
இதுவரை இந்த ரோஜ்கர் மேளா, நாடு முழுவதும் 47 இடங்களில் நடத்தப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் இளைஞர்கள் பணியில் சேர்ந்தனர்.
ரயில்வே அமைச்சகம், உள்துறை அமைச்சகம், அஞ்சல் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், நிதி சேவைகள் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் உள்ளிட்ட பல துறைகளில் புதிய நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் மற்றும் நாட்டின் மனிதவளத்தை மேம்படுத்தும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முன்னெடுப்பு அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications