பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டம்.. PM-YASASVI மூலம் மத்திய அரசு சூப்பர் சான்ஸ்! பலன்களை பாருங்க
சென்னை: இதர பிற்படுத்தப்பட்டோர் (பிசி, எம்பிசி, டிஎன்சி) பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டம் ('யசஸ்வி') மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. நடப்பாண்டில், இத்திட்டத்தின் கல்வி உதவித்தொகையை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் இன்றுடன் முடிகிறது.
பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை திட்டங்களை, மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றன.. இதனால் ஏராளமான மாணவ, மாணவிகள் பெரும்பலனை அடைந்து வருகிறார்கள்.

இளம் சாதனையாளர்கள்
அந்தவகையில், மத்திய அரசின் பிரதமர் இளம் சாதனையாளர்கள் கல்வி உதவித்தொகை (PM YASASVI) திட்டம், பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், சீர்மரபினர் பிரிவு மாணவர்களுக்கு உயர்தர கல்வியை வழங்குகிறது.
இளம் சாதனையாளர்கள் கல்வி உதவித்தொகை திட்டம் என்பது, பிற்படுத்தப்பட்டோர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கியோர் (EBC), மற்றும் சீர்மரபினர் (DNT) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர்தர கல்வி வழங்குவதற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட அருமையான திட்டமாகும்.
Prime Minister Young Achievers Scholarship Award Scheme for Vibrant India என்பதன் சுருக்கம்தான் PM YASASVI Scholarship ஆகும். இந்த திட்டத்தின் மூலம், 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தேசிய கல்வி உதவித்தொகை
அந்தவகையில், 2025-2026ம் ஆண்டிற்கான தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியலிடப்பட்ட (Top Class Schools) பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
எனவே, இந்த திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் (https://scholarships.gov.in) (National Scholarship Portal) Renewal Application Groom இணைப்பில் (Link) சென்று OTR Number (One Time Registration) பதிவு செய்து 2025-26ம் ஆண்டிற்கான விண்ணப்பத்தினை புதுப்பித்தல் (Renewal) கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்ல, விண்ணப்பம் செய்வதற்கு இன்றுதான் அதாவது செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாளாகும். புதிய விண்ணப்பங்கள் மற்றும் புதுப்பித்தலுக்கான இன்று செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாளாகும்.. பள்ளிகள் விண்ணப்பங்களைச் சரிபார்க்க கடைசி நாள், வரும் அக்டோபர் 15ம் தேதியாகும்.
யார் யார் விண்ணப்பிக்கலாம்?
2025-26ம் கல்வியாண்டில், மத்திய அரசின் பட்டியலிடப்பட்ட (Top Class Schools) பள்ளிகளில் 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பயிலும் தமிழக மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். ஆனால், மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
பிஎம் கல்வி உதவித்தொகை
புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9, 11ம் வகுப்புகளில் பட்டியிலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள், தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் விண்ணப்பிக்கலாம். National Scholarship Portal (NSP) என்ற வெப்சைட்டிற்குள் நுழைந்து, உங்களது செல்போன் எண் மற்றும் ஆதார் விவரங்களை பதிவிட வேண்டும். இப்போது ஒரு முறை பதிவு எண் (OTR Number) மற்றும் பாஸ்வேர்டு உங்களது செல்போனுக்கு வரும்,
இந்த ஓடிஆர் நம்பரை பயன்படுத்தி நடப்பு கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து புதிதாக (Fresh Application) விண்ணப்பித்து கொள்ளலாம்.
பட்டியலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை அறிந்திட தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.. மேலும் இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிந்திட (National Scholarship Portal) (https://scholarships.gov.in) இணையதளத்தினை அணுகி கல்வி உதவித்தொகை பயன்களைப் பெறலாம்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications