அதிமுக - பாஜக இடையே தொகுதிப் பங்கீடு வரை பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாமே??
அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாமக உள்ளிட்ட கட்சிகள் தயாராகின்றன
சென்னை: அதிமுக கூட்டணிக்கு தயாராகிவிட்டது. அது சம்பந்தமாக ஓரளவு தகவல்களும் கசிய ஆரம்பித்து விட்டன.
அதாவது ஜனவரி மாதம் பிரதமர் மோடி தமிழகம் வரபோகிறார். ஜனவரியில் தாங்கள் யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்போம் என்று தமிழிசை சவுந்தராஜனும் சொல்லிவிட்டார்.
ஆனாலும் ஒருகட்ட அதிமுக - பாஜக கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்படுகிறது. பாஜகவுடன், அதிமுக கூட்டணியில், பாமக, தேமுதிக, புதிய தமிழகம் கட்சிகள் இணைய உள்ளதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பாஜகவை ஏற்குமா?
ஆனால் நாள்தோறும் அறிக்கை, ட்விட்டர் என்று ஒன்றுவிடாமல் பாஜகவை திட்டிகொண்டிருக்கும் பாமக, எப்படி பாஜகவை ஏற்க போகிறதோ என்ற சந்தேகமும் இந்தகூட்டணியை பற்றி கேள்விப்பட்டவுடன் எழுந்து செல்கிறது.

15 தொகுதிகள்
அதிமுகவுக்கு 25 சீட் என்பது இப்போதைய நிலை. மீதமிருப்பது 15 தொகுதிகள்தான். இந்த 15 தொகுதிக்குதான் இப்போது போட்டியே என்று கூறப்படுகிறது. 15-ல் தங்களுக்குத்தான் அதிகம் வேண்டும் என்று ஒரு பக்கம் பாமகவும், மற்றொரு பக்கம் பாஜகவும் கேட்பதாகவும், இதில் கொஞ்சம் அதிகமாக முரண்டு பிடிப்பது பாமகதான் என்றும் தகவல்கள் சொல்கின்றன.

பாமக? பாஜக?
அதனால் பாஜகவை பார்ப்பதா? பாமகவை பார்ப்பதா என்று அதிமுகவும் குழம்பி உள்ளது. ஆனால் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு சீட்தான் தர முடியும். அதைவிட கொஞ்சம் அதிகம் என்றால் தேமுதிகவுக்கு தரலாம். அதுவும் 5-க்குள்தான் ஒதுக்க முடியும். அதற்குமேல் தருவதற்கு கட்சியின் வளர்ச்சி மங்கிப்போய் காணப்படுகிறது.

விரைவில் வெளியாகும்
திமுக, காங்கிரஸ் கட்சிகள் தேமுதிகவை சேர்த்து கொள்ளாத நிலையில், கொடுப்பதை வாங்கி கொள்ளும் நிலையில்தான் அந்த கட்சி உள்ளது. எனவே பாஜக, பாமக கட்சிகளில் உடன்பாடு ஏற்பட்டுவிட்டால், சீட் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மக்கள் கோபம்
புதிய தமிழகம், தேமுதிகவும் பெரிய தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தாததால், பெரிய அளவில் வெற்றி கிடைக்காது. பாஜகவின் நிலையும் இப்போது அப்படித்தான் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆர்.கே.நகருக்கு பிறகுதான் பாஜக மீது மக்கள் கோபம் அதிகரித்துள்ளது. அதனால் பாஜகவும் பெரிய வெற்றியை தந்துவிடாது. அதனால் அதிமுக அதிகமாக நம்பி இருப்பது பாமகவைதான்.

பெரும்பான்மை வருமா?
ஏனெனில் தினகரனால் பிரிந்த வாக்குகளை பாமகதான் சேர்க்கும் என்று அதிமுக நம்பி கொண்டிருக்கிறது. எப்படி பார்த்தாலும், பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் என எல்லாம் ஒன்று சேர்ந்தாலும் அதிமுக பெரும்பான்மையை பிடிக்க முடியாது என்றே அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.
-
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications