சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குப்பைக்கு போன வரலாறு.. திண்டுக்கல்லை பாமகவிடம் தூக்கி கொடுத்த அதிமுக.. அதிர்ச்சியில் தொண்டர்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக கூட்டணியில் எந்த கட்சி எங்கே போட்டியிடுகிறது ?

    சென்னை: பெரும்பாலும் யாருக்குமே தராத திண்டுக்கல் தொகுதியை அதிமுக பாமகவுக்கு ஒதுக்கியுள்ளதும், முதல்முறையாக திண்டுக்கல்லில் பாமக களம் இறங்குவதும் பெரிய அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது!

    எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து முதன்முதலில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றது இந்த திண்டுக்கல் தொகுதியில். அப்போது முதல் இந்த தொகுதி அதிமுகவின் சென்ட்டிமென்ட்.. அதிமுகவின் கோட்டை!

    திமுக, காங்கிரஸ், தமாகா போன்ற கட்சிகள் இங்கு ஜெயித்து வந்தாலும், முகவரி தந்த தொகுதி என்பதால் அதிமுக இந்த தொகுதியை பெரும்பாலும் யாருக்குமே விட்டுக் கொடுக்காது! ஜெயலலிதா இருந்தவரை இதை இப்படித்தான் வைத்திருந்தார்.

    வாரிசு அரசியல், குடும்ப அரசியல் குறித்த கடும் விமர்சனம் .. சுதீஷ் யாருங்க பிரேமலதா மேடம் வாரிசு அரசியல், குடும்ப அரசியல் குறித்த கடும் விமர்சனம் .. சுதீஷ் யாருங்க பிரேமலதா மேடம்

    ஜோதிமுத்து

    ஜோதிமுத்து

    ஆனால் இந்த முறை பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. இதற்கு காரணம் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், இன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்தான். இவர்கள் இருவருமே தங்கள் உறவுகளுக்கு சீட் கேட்டு தலைமையை நச்சரித்து வந்தார்கள். இவர்கள் இரண்டு பேரை சமாளிக்க முடியாமலும், கோஷ்டி பூசலை தவிர்க்கவும்தான் பாமகவுக்கு இந்த தொகுதியை ஒதுக்கியதாக ஒரு காரணம் சொல்லப்படுகிறது. இதனால் ஜோதிமுத்து என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    பின்னடைவு

    பின்னடைவு

    இப்போது சிக்கல் என்னவென்றால், வடமாவட்டங்களில் வலுவான பாமகவுக்கு ஒரு சில தொகுதிகளை தவிர தென் மாவட்டங்களில் பலம் கிடையாது. செல்வாக்கே இல்லாத திண்டுக்கல் தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியுள்ளது பாமகவுக்கு மட்டுமல்லாது, அதிமுகவுக்கே பின்னடைவு ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

    அறிமுகக்கூட்டம்

    அறிமுகக்கூட்டம்

    அதிமுக நேரடியாக திண்டுக்கல்லில் களம் இறங்காததால் திமுக தெம்பாக உள்ளது. வேலுச்சாமி என்பவரை இக்கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது. ஆனால் திமுக வேலுச்சாமியாகட்டும், பாமக ஜோதிமுத்து ஆகட்டும், இந்த இருவருமே பிரபலம் இல்லாத நபர்கள். இருவரும் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த விவசாயிகள். அதனால் அறிமுகக் கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளதை அக்கட்சியின் பரிதாபம் என்றே கருதப்படுகிறது.

    ஐ. பெரியசாமி

    ஐ. பெரியசாமி

    அதிமுகவின் வலுவான தொகுதியான திண்டுக்கல்லை எப்படியாவது இந்த முறை பிடித்துவிட வேண்டும் என்று திமுக திட்டமிட்டு வருகிறது. இதற்காக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என தெரிகிறது. அதேபோல, பாமக வேட்பாளரை வெற்றி பெற வைத்து, தங்களுடைய கோட்டையை தக்க வைத்து கொள்ள அதிமுகவும் பெரிய அளவில் களப்பணி ஆற்றும் என தெரிகிறது. ஆக மொத்தம், அதிமுக எளிதாக ஜெயிக்க வேண்டிய தொகுதி இன்றைக்கு சிக்கலாகி விட்டதாக கூறப்படுகிறது.

    English summary
    PMK contest in Dindigul Parliamentary Constituency for the first time
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X