சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பம்! கூடுதல் கால அவகாசம் வேண்டும்! பாமக வேண்டுகோள்!

Google Oneindia Tamil News

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என பாமக வேண்டுகோள் விடுத்துள்ளது.

சர்வர் பிரச்சனை காரணமாக இந்தாண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் பெறப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

உயர் பதவிய விடுங்க.. சாதாரண வேலையில் கூட நாங்க இல்ல! பதவி உயர்வில் ஓபிசி இடஒதுக்கீடு கோரும் ராமதாஸ் உயர் பதவிய விடுங்க.. சாதாரண வேலையில் கூட நாங்க இல்ல! பதவி உயர்வில் ஓபிசி இடஒதுக்கீடு கோரும் ராமதாஸ்

தகுதித் தேர்வு

தகுதித் தேர்வு

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது. ஆனால், கடைசி ஒரு வாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சர்வர் முடங்கியதால் பல்லாயிரக்கணக்கானவர்களால் விண்ணப்பம் செய்ய முடியவில்லை.

கால அவகாசம்

கால அவகாசம்

பி.எட் பட்டப்படிப்புக்கான முதலாமாண்டு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாததால் அவர்களாலும் விண்ணப்பிக்க முடியவில்லை. சர்வர் பிரச்சினை, கால அவகாசம் போதாமையால் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் பெறப்படவில்லை.

7 லட்சம் பேர்

7 லட்சம் பேர்

கடந்த காலங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 7 லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருந்த நிலையில், இம்முறை சுமார் 4 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க வசதியாக நாளை 18-ஆம் தேதி முதல் இரு வாரம் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்.

அமைச்சர் பதில்

அமைச்சர் பதில்

இதனிடையே ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க போதுமான கால அவகாசம் தரப்பட்டிருந்ததால் மேலும் கால அவகாசம் அளிக்கத் தேவையில்லாத நிலை உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அன்புமணி ராமதாஸிடம் இருந்து இப்படி ஒரு கோரிக்கை எழுந்துள்ளது.

Pmk demands about TET Exam: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என பாமக வேண்டுகோள் விடுத்துள்ளது.

English summary
Pmk demands about TET Exam: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என பாமக வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X