ஒரே ஒரு டிவீட்.. அத்தனை பேரையும் தெறிக்க விட்ட டாக்டர் ராமதாஸ்!
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டர் பதிவுக்கு அர்த்தம் என்ன?
சென்னை: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாரும் இப்போது மண்டை காய்ந்து கிடக்கிறார்கள். அதற்கு காரணம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்தான்!!
கூடிய சீக்கிரம் தேர்தல் வரப்போகிறது.அதற்காக எல்லா கட்சிகளும் தங்களை ஆயத்தப்படுத்தி வருகிறார்கள். இதற்கான கூட்டணிக்கும் தயாராகி அதற்கான தூது வேலைகளும் நடந்து வருகின்றன.
இதில் பாமகவும் தேர்தலுக்கு போட்டியிட போகிறது. கூட்டணி வைத்துதான் போட்டியிட போகிறோம் என்று கறாராக சொல்லிவிட்டது. ஆனால் யாருடன் கூட்டணி என்று இதுவரை அறிவிக்கப்படாமல் உள்ளது.

கூட்டணி முயற்சி
ஆனால் அதற்குள், திமுக தரப்பில், பாமகவை சேர்க்க மாட்டோம் என்று சொல்லி விட்டார்கள். இப்போது பாமகவும் கூட்டணி வியூகம் அமைக்கத்தான் முயற்சி செய்து வருகிறது.

தலை சுத்துகிறது
அதிமுகவுடன் கூட்டு சேரப்போகிறதா? அல்லது டிடிவியுடன் இணைய போகிறதா? என்றெல்லாம் இன்னும் விளங்காமலேயே உள்ளது. இந்நிலையில் ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டை போட்டு இன்னும் தலைசுத்த விட்டிருக்கிறார்.
|
பழுத்த பழம் மடியில்
தனது ட்விட்டர் பக்கத்தில் ராமதாஸ் பதிவிட்டுள்ளதாவது: "பேரிக்காய் பழுக்கும் வரை காத்திருக்க மனமில்லாத ஒருவன் தினமும் மரத்தையே பார்த்துகொண்டிருந்தான்.அவன் கட்டாயப்படுத்தி பழுக்க வைக்க முயன்றால் பழம், மரம் இரண்டும் நாசமாகி விடும்.பொறுமையுடன் காத்திருந்தால் பழுத்த பழம் அவனது மடியில் விழும்! - ஆப்ரஹாம் லிங்கன், அமெரிக்க முன்னாள் அதிபர்." என்று பதிவிட்டுள்ளார்.

அர்த்தம் என்ன?
பொறுமையுடன் காத்திருக்க சொல்கிறாரே ராமதாஸ்? யாரை சொல்கிறார்? யார் இவரை இப்போது அவசரப்படுத்தி வருகிறார்கள்? ராமதாசின் இந்த பதிவுக்கு என்ன அர்த்தம் என்றெல்லாம் தெரியவில்லை. யாரை மனதில் நினைத்து, இதை பதிவிட்டார் என்றும் தெரியவில்லை.

நூல் விடுகிறார்
ஆனால் ராமதாஸ் யாரை சொல்கிறார் என்று இந்த ட்வீட்டை பார்ப்பவர்களுக்கு மட்டும் தெரியும்போல. எப்படியோ, யாருக்கோ ராமதாஸ் நூல் விடுகிறார். ஆனால் யாருக்கு என்றுதான் நமக்கு இன்னும் பிடிபடவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications