ராமதாஸ் தூக்கி போட்ட திடீர் குண்டு.. "மக்களா சட்டமா"?.. வெடித்து கிளம்பிய கமெண்ட்டுகள்!
இடஒதுக்கீடு குறித்து டாக்டர் ராமதாஸ் ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: திடீரென சட்டத்தை பற்றி பேசியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.. யாருடைய சட்டம் பற்றி என்று தெரியவில்லை. எந்த சட்டம் என்றும் புரியவில்லை. "மக்களுக்காகத் தான் சட்டங்களே தவிர, சட்டங்களுக்காக மக்கள் அல்ல... அதனால் தான் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இதுவரை 104 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன" என்று நறுக்கென ஒரு டிவீட் போட்டுள்ளார். வழக்கம் போல மொட்டையாகத்தான் இருக்கிறது.
பலமுறை திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்தாலும் எந்த சட்டத்தைப் பற்றி சொல்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் எதையோ மனதில் வைத்துதான் இதை சொல்கிறார் என்று தெரிகிறது. அதைத்தான் கமெண்ட் போடுகிறவர்களும் விதம் விதமாக கேள்வி கேட்டும், கமெண்ட் போட்டும் இந்த விவாதத்தை கலகலப்பாக்கியுள்ளனர்.

ஆனால் டாக்டர் ராமதாஸ் குறிப்பிடுவது இட ஒதுக்கீடு குறித்துதான் என்று உள்ளங்கை நெல்லிக்கனியாக புரிகிறது. அதாவது வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டைத்தான் அவர் மறைமுகமாக இப்படி குறிப்பிட்டுள்ளார். அவர் மக்கள் என்று கூறியிருப்பது நிச்சயம் வன்னியர்களை மட்டும்தான் என்றும் புரிகிறது. வன்னியர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டைத்தான் இப்படி போட்டுள்ளார் ராமதாஸ் என்று சொல்கிறார்கள்.
அதிமுகவுடன் கூட்டணியில் நீடிக்க இதை ஒரு நிபந்தனையாகவே பாமக வைத்திருப்பதாக தெரிகிறது. ஆனால் வன்னியர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீட்டை கொடுத்தால் பின்னாடியே மற்ற ஜாதியினரும் கிளம்பி விடுவார்கள். முக்குலத்தோர் ஜாதியினர் சும்மா இருக்க மாட்டார்கள்.. ஏற்கனவே கருணாஸ் முண்டா தட்டி காத்து கொண்டிருக்கிறார்.. முக்குலத்தோர் மட்டுமல்லாமல் மற்ற ஜாதியினரும் கண்டிப்பாக கேட்பார்கள்.

இதை எதிர்பார்த்துத்தான் முதல்வர் எடப்பாடியார் இந்த விஷயத்தில் படு நிதானமாகவும், பக்குவமாகவும் செயல்படுகிறார். அவசரப்படாமல் ராமதாஸுடன் தொடர்ந்து பேசி வருகிறார். அவர் இதில் காட்டும் நிதானமும், கவனமும் எந்த ஜாதியையும் தான் பகைத்து கொள்ளவில்லை என்பதை நிரூபிப்பதாக உள்ளது. ஆனால் ராமதாஸோ விடாமல் விரட்டிக் கொண்டிருக்கிறார்...!
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications