சோலி முடிஞ்சு..ஒரு காலத்துல கெத்தா இருந்த ராமதாஸ்! 2026ல இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாரே! என்னாச்சு?
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட முக்கிய அரசியல் அணிகள் தங்களது கூட்டணிகளை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக இருக்கும் சூழலில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எடுத்துள்ள முடிவு அவரது ஆதரவாளர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. வட மாவட்டங்களில் 30 தொகுதிகளில் ராமதாஸ் தரப்பு தனித்து போட்டியிடவுள்ளது. இதற்கான நிதி ஆதரத்துக்கு முக்கிய கட்சி ஒன்று உதவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் ஏற்கனவே இடம்பெற்றுள்ள நிலையில், பாமக இரண்டாகப் பிரிந்த பிறகு, அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது.
அந்த அணிக்கு 15 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாது. இதற்கு போட்டியாக, ராமதாஸ் தலைமையிலான அணி திமுக கூட்டணியில் இணைய முயற்சி மேற்கொண்டதாகவும், அதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக கூட்டணி
அந்த பேச்சுவார்த்தைகளில், அன்புமணிக்கு வழங்கப்பட்ட அளவுக்கு குறைந்தது இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வேண்டும் என ராமதாஸ் தரப்பு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, 15 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ராமதாஸ் முன்வைத்த நிலையில், திமுக தரப்பில் அதிகபட்சமாக 4 முதல் 5 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாகவும், திமுக கூட்டணிக்கான கதவு முற்றிலும் மூடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் அரசியல்
இதன் பின்னணியில், கடந்த சில மாதங்களாக திமுக அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துவந்த ராமதாஸ், திடீரென திமுக அரசுக்கு எதிரான தொனியில் அறிக்கையை வெளியிட்டது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கதவு மூடியதும், அவரது நிலைப்பாட்டில் ஏற்பட்ட இந்த மாற்றம், அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கான முன்னோட்டம் எனப் பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் ராமதாஸ் முன் இரண்டு முக்கிய அரசியல் தேர்வுகள் உள்ளதாக கூறப்படுகிறது.
ராமதாஸ் திட்டம்
ஒன்று, வட மாவட்டங்களில் செல்வாக்கு உள்ள தொகுதிகளில் தனித்து அல்லது ஆதரவாளர்களுடன் களம் இறங்குவது. மற்றொன்று, தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைத்து, குறைந்தது 25 முதல் 30 தொகுதிகளில் போட்டியிடுவது. இதில் முதல் வாய்ப்பை நோக்கி ராமதாஸ் தரப்பு நகர்ந்து வருவதாகவு தகவல்கள் வெளியாகியுள்ளது. வட மாவட்டங்களில் அதிமுக கூட்டணி குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை களம் இறக்குவது தான் ராமதாஸின் திட்டம் என சொல்லப்படுகிறது.
வட மாவட்டங்கள்
இந்த முறை நாம் தமிழர் கட்சியோடு விஜய்யும் களமிறங்குவதால் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கூட வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படலாம். எனவே தங்களை புறக்கணித்த கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆதரவாளர்களை வட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் போட்டியிட வைக்க ராமதாஸ் தரப்பு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான நிதி ஆதாரம் தன்னிடம் இருந்தாலும், அதிமுகவின் வெற்றி வாய்ப்பை முடிக்கிறேன் என சொல்லி தமிழகத்தின் பிரபல அரசியல் கட்சி ஒன்றிடம் நிதி ஆதாரத்தை ராமதாஸ் தரப்பு கேட்டிருப்பதாகவும், அந்த கட்சியும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அறிந்து சொல்லப்படுகிறது. இதை அடுத்து தனித்துப் போட்டி என்ற முடிவில் ராமதாஸ் உறுதியாக இருப்பதாக சொல்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications