Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சும்மா விடக்கூடாது.. டெல்லியில் தமிழ் மாணவர்களை தாக்கியது யாரானாலும் “ஆக்‌ஷன்” எடுக்கனும் - ராமதாஸ்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் உட்பட பலர் மீது ஏபிவிபி-யினர் நடத்திய தாக்குதலுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து இருக்கிறார். தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ் உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

கடந்த 12 ஆம் தேதி மும்பை ஐஐடியில் 18 வயது தலித் மாணவர் தர்ஷன் சொலான்கி பி டெக் முதலாம் ஆண்டு பயின்று வந்து உள்ளார். கடந்த 12 ஆம் தேதி ஐஐடி விடுதியின் மாடியில் இருந்து சொலான்கி கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது

காவல்துறை இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சொலான்கியுடன் விடுதி அறையில் ஒன்றாக தங்கி இருந்த சக மாணவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மும்பை ஐஐடியில் செயல்பட்டு வரும் APPSC எனப்படும் அம்பேத்கர் பெரியார் பூலே படிப்பு வட்டம், சொலான்கி மரணத்துக்கு நிறுவன படுகொலையே காரணம் என்று தெரிவித்தது.

 மாணவர்கள் போராட்டம்

மாணவர்கள் போராட்டம்

தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்கள் ஐஐடி வளாகங்களில் மர்மமான முறையில் உயிரிழப்பதன் பின்னணியில் சாதி, மத ஒடுக்குமுறையே காரணம் என்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்த நிலையில், பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சொலான்கியின் மரணத்துக்கு நீதிகோரி மாணவர்கள் போராடி வருகிறார்கள்.

ஜேஎன்யு மாணவர்கள் பேரணி

ஜேஎன்யு மாணவர்கள் பேரணி

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் சார்பில் மும்பை ஐஐடி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த முதலாம் ஆண்டு தலித் மாணவர் தர்ஷன் சொலான்கி மரணத்துக்கு நியாயம் கேட்டு ஊர்வலம் சென்றதாக கூறப்படுகிறது. இதில் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்று உள்ளார்கள்.

ஏபிவிபி சிறப்பு நிகழ்ச்சி

ஏபிவிபி சிறப்பு நிகழ்ச்சி

அதே நேரத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளை கொண்டாடிய ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏபிவிபி யை சேர்ந்தவர்கள், சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து உள்ளனர். அப்போது, இடதுசாரி மாணவர் அமைப்பினர் ஒரு ஆவணப் படத்தை திரையிடவும் முடிவு செய்து இருக்கின்றனர்.

தாக்குதல்

தாக்குதல்

இதனால் குழப்பம் நிலவிய நிலையில், இடதுசாரி மாணவர் அமைப்பினர் மீது ஏபிவிபி அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு இருக்கிறது. அங்கிருந்த பெரியார், கார்ல் மார்க்ஸ் போன்ற தலைவர்களின் படங்களையும் சேதப்படுத்திய ஏபிவிபி அமைப்பினர் பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கி உள்ளனர்.

தமிழ் மாணவர்கள் காயம்

தமிழ் மாணவர்கள் காயம்

இதில் தமிழ்நாட்டை சேர்ந்த நசீர் என்ற மாணவரின் மண்டை உடைந்து ரத்தம் வழிந்தோடியது. மற்றொரு மாணவருக்கு உடலின் பல பாகங்களில் காயங்கள் ஏற்பட்டன. அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸையும் வரவழைக்கப்பட்டது. அந்த ஆம்புலன்சையும் ஏபிவிபி மாணவர் அமைப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது.

 ஆம்புலன்சை தாக்கிய ஏபிவிபி

ஆம்புலன்சை தாக்கிய ஏபிவிபி

படுகாயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதற்கிடையே சத்ரபதி சிவாஜியின் படத்தை இடதுசாரி மாணவர் ஒருவர் தரையில் வைத்து அவமதித்ததாக ஏபிவிபி அமைப்பினர் தெரிவித்து உள்ளார்கள். இந்த சம்பவம் டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமதாஸ் கண்டனம்

ராமதாஸ் கண்டனம்

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் ராமதாஸ், "தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் இன்று நடைபெற்ற பேரணியின் போது தமிழ்நாட்டைச் சேர்ந்தோர் உள்ளிட்ட மாணவர்கள் தாக்கப்பட்டு இருக்கின்றனர். தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ் உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இவை கண்டிக்கத்தக்கவை.

 நடவடிக்கை வேண்டும்

நடவடிக்கை வேண்டும்

பல்கலைக்கழக வளாகங்களில் நீதி கேட்டு போராடும் உரிமை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதை தடுக்கும் உரிமை யாருக்கும் வழங்கப்படவில்லை. மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்." என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+