‘ஆளுநர் ரவி நல்லா படிக்கலைனு தெரியுது.. முழுசா தெரியாம அவதூறு பரப்பக்கூடாது’.. கண்டித்த ராமதாஸ்!
கார்ல் மார்க்ஸ் குறித்த ஆளுநரின் கருத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை : "கார்ல் மார்க்ஸ் குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது, கார்ல் மார்க்ஸ் எந்த நாட்டுக்கும் எதிராகச் செயல்படவில்லை; அது அவரது கொள்கையும் அல்ல. கார்ல் மார்க்சின் கருத்துகளை ஆளுநர் நன்றாக படிக்கவில்லை என்பதையே அவரின் கருத்துகள் காட்டுகின்றன" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் ராஜ் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், கார்ல் மார்க்சின் சிந்தனைகள் நாட்டைச் சிதைத்துவிட்டதாக விமர்சித்திருந்தார்.
இதற்கு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன. பிப்ரவரி 28ஆம் தேதி ராஜ் பவன் முன் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக சிபிஐஎம் அறிவித்துள்ளது.

ஆளுநர் ரவி
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது தெரிவிக்கும் கருத்துகள் தொடர்ந்து சர்ச்சையைக் கிளப்பி வருகின்றன. அந்தவகையில், சமீபத்தில் ஆளுநர் ரவி கார்ல் மார்க்ஸ் சிந்தனை நாட்டின் வளர்ச்சியை சிதைத்தது எனப் பேசியிருப்பது கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது. சென்னை ராஜ் பவனில் 'பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா சிந்தனைச் சிதறல்கள்' மற்றும் 'பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா ஒருங்கிணைந்த மனிதநேயம்' ஆகிய புத்தகங்களின் தமிழாக்க நூல்கள் வெளியீட்டுவிழா நடைபெற்றது.

மார்க்ஸ் சிந்தனையால் சிதைவு?
இந்த நிகழ்வில் பேசிய ஆளுநர் ரவி, "நமது தேசிய வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துவது நான்கு முக்கிய மேற்கத்திய சித்தாந்தங்கள். அவை இறையியல், டார்வீனிய கோட்பாடு, காரல் மார்க்ஸ் கோட்பாடு, ரூசோவின் சமூக ஒப்பந்தக் கோட்பாடு ஆகியவை. காரல் மார்க்ஸின் கோட்பாடு என்பது, இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையே நிரந்தர மோதல்ளைக் கொண்டது. அவரது யோசனை வைரஸாகப் பரவுகிறது." எனப் பேசியிருந்தார். இதற்கு சிபிஐ. சிபிஐஎம் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

ஆளுநர் முழுமையாக படிக்கவில்லை
இந்நிலையில், இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஜெர்மானிய தத்துவ அறிஞர் கார்ல் மார்க்சின் கொள்கைகள் இந்தியாவுக்கு எதிரானவை; அவை இந்திய வளர்ச்சிக்கு தடையாக இருந்தன என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது தவறு, கண்டிக்கத்தக்கது. கார்ல் மார்க்ஸ் எந்த நாட்டுக்கும் எதிராகச் செயல்படவில்லை; அது அவரது கொள்கையும் அல்ல. கார்ல் மார்க்சின் கருத்துகளை ஆளுநர் நன்றாக படிக்கவில்லை என்பதையே அவரின் கருத்துகள் காட்டுகின்றன!

ஆர்என் ரவி அவதூறு பரப்பக்கூடாது
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற பொதுவுடைமை தான் கார்ல் மார்க்சின் கொள்கையாகும். அவரின் கொள்கைகளையும், மூலதனம் நூலையும் உலகமே பாராட்டுகிறது. பாமகவின் கொள்கை வழிகாட்டிகளில் மார்க்சும் ஒருவர். கார்ல் மார்க்ஸ் குறித்து முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் ஆளுநர் அவதூறுகளை பரப்பக்கூடாது, அது அவருக்கு வழங்கப்பட்ட பணியும் அல்ல. கார்ல் மார்க்ஸ் குறித்து தவறான தனது விமர்சனத்தை ஆளுநர் திரும்பப்பெற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications