அமித்ஷா என்ட்ரிக்கு முன்பே.. சென்னையில் ராமதாஸ் - ஆடிட்டர் குருமூர்த்தி திடீர் சந்திப்பு.. பின்னணி
சென்னை: பாமகவில் நிறுவனம் ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடும் மோதல் நிலவி வருகிறது. இந்த பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராத நிலையில் ஆடிட்டர் குருமூர்த்தியை சென்னையில் வைத்து ராமதாஸ் இன்று திடீரென்று சந்தித்து பேசியது. கடந்த 5ம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை, ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்து பேசிய நிலையில் இன்று 2 வது முறையாக இருவரும் பேசியிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாமக நிறுவனம் ராமதாஸ்க்கும், மகன் அன்புமணி ராமதாஸ்க்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் எதிரெதிர் துருவங்களாக கட்சியில் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் 2 பேரும் சமாதானமாக செல்ல வேண்டும் என்று கட்சியினர் விரும்புகின்றனர். ஆனால் இன்று வரை இருவரும் இணைந்து செயல்பட தொடங்கவில்லை.

இந்த பிரச்சனைக்கு நடுவே தான் கடந்த 5ம் தேதி தைலாபுரம் தோட்டத்துக்கு சென்று ராமதாஸை ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்து பேசியிருந்தார். இதையடுத்து இன்று சென்னைக்கு ராமதாஸ் சென்றார். அங்கு அவர் ஆடிட்டர் குரூமூர்த்தி மற்றும் சைதை துரைசாமியை சந்தித்து பேசினார். சென்னை தியாகராய நகரில் உள்ள ஏகே மூர்த்தியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வருகிறார். பாமக தற்போது பாஜக கூட்டணியில் உள்ளது. இதில் ராமதாஸ்க்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் ஆடிட்டர் குருமூர்த்தி பாஜக தலைவர்களுக்கு நெருக்கமானவர். இதனால் இந்த சந்திப்பு என்பது தமிழக அரசியலில் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications