ஆசிரியர்கள் நியமனத்தில் சமூக அநீதி... ஆசிரியர் தேர்வு வாரியம் துரோகம்... ராமதாஸ் விளாசல்
சென்னை: அரசு பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதில் மீண்டும் ஒருமுறை இட ஒதுக்கீடு விதிகள் மீறப்பட்டுள்ளதாக பட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாமல் சமூக நீதிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் துரோகம் செய்துள்ளதாகவும், அது கண்டிக்கத்தக்கது என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புகார்
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27,28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இட ஒதுக்கீட்டு விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டிறுக்கிறது என ராமதாஸ் கூறியுள்ளார்.

இட ஒதுக்கீடு
இட ஒதுக்கீடு முறையை ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றியிருந்தால் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 131 பேருக்கு ஆசிரியர் பணி கிடைத்திருக்க வேண்டும் என்றும், ஆனால் அதனை பின்பற்ற ஆசிரியர் தேர்வு வாரியம் தவறிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

தவறு
இட ஒதுக்கீடு வழங்குவதில் தவறு நடப்பதை ஆதாரங்களுடன் விளக்கிய பிறகும், இழைக்கப்பட்ட துரோகத்தை சரி செய்யாமல் கடந்த காலங்களில் செய்ததை தாங்களும் செய்வதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கூறுவது பொறுப்பற்ற செயல் என கண்டித்துள்ளார் ராமதாஸ்.

தலையிடுக
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை புரிந்துகொள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராக இல்லை எனக் கூறியுள்ளார். இதனிடையே முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், இதில் தலையிட்டு சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications