சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏட்டுச் சுரைக்காய் கல்விமுறை வேண்டாம்... ராமதாஸ் வேண்டுகோள்

Google Oneindia Tamil News

சென்னை: மாணவர்களை மதிப்பெண் எந்திரங்களாக பள்ளிகள் கையாளக்கூடாது என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், சுமையற்ற சுகமான கல்விமுறையே தேவை என்றும், இதை உணர்ந்து மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் எனவும் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சுதந்திர போராட்டத்தை காட்டிக் கொடுத்த பிரிட்டிஷ் உளவாளிகள்... அசோக் கெலாட் கடும் தாக்கு சுதந்திர போராட்டத்தை காட்டிக் கொடுத்த பிரிட்டிஷ் உளவாளிகள்... அசோக் கெலாட் கடும் தாக்கு

சுமையற்ற கல்வி

சுமையற்ற கல்வி

பள்ளி மாணவர்களுக்கு சுமையற்ற சுகமான கல்வி முறை வேண்டும் என்பதை தான் பொதுவாழ்வுக்கு வந்த 40 ஆண்டுகளாக தாம் வலியுறுத்தி வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பள்ளி வளாகங்கள் கோபமற்ற, மகிழ்ச்சியான பகுதியாக திகழவேண்டும் என்பது தான் பாமகவின் நிலைப்பாடு எனத் தெரிவித்துள்ளார்.

சி.பி.எஸ்.இ.

சி.பி.எஸ்.இ.

சி.பி.எஸ்.இ. ஆளுகைக்குள் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் கோபம் இல்லாத, மகிழ்ச்சி நிறைந்த பகுதியாக மாற்ற வேண்டும் என அந்த அமைப்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது வரவேற்கத்தக்கது என்றும், ஆனால் அதேவேலையில் கல்விமுறையை சுமையற்றதாக மாற்றாமல் வெறும் அணுகுமுறைகள் மட்டும் பயன் தராது என்றும் தெரிவித்துளார்.

புத்தக எடை

புத்தக எடை

பள்ளி செல்லும் மாணவர்களின் எடையை விட அவர்கள் தூக்கிச் செல்லும் புத்தகங்களின் எடை பன்மடங்கு கூடுதலாக இருப்பதாகவும், எல்.கே.ஜி.க்கு சேர்க்க முன் இரவில் இருந்து வரிசையில் நின்று விண்ணப்பம் வாங்குவதில் தான் கல்விச்சீரழிவு தொடங்குவதாகவும் வேதனை தெரிவித்திருக்கிறார்.

ஓட்டம்

ஓட்டம்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் தான் அறிவாளிகள் என்ற தவறான சிந்தனை விதைக்கப்பட்டுள்ளதாகவும், பின்லாந்து நாட்டை போல் வீட்டுப்பாடம் இல்லாத, சிந்திக்கும் திறனை வளர்க்கும் முறையில் கல்விமுறையை கொண்டுவர வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

English summary
pmk founder ramadoss says, we need weightless education system
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X