ராமதாசுக்கு அதிர்ச்சி கொடுத்த மெய்க்காப்பாளர்... பாமகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த பின்னணி..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாட்டாளி மக்கள் நிறுவனர் ராமதாசுக்கு மெய்க்காப்பாளராக பணியாற்றிய சுனில் என்பவர் இப்போது திமுகவில் ஐக்கியமாகியுள்ளார்.

ராமதாசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருக்கு பணிவிடை செய்து வந்த சுனில் எதிர்முகாமிற்கு சென்றிருக்கிறார்.

இதனிடையே சுனில் கட்சியில் எதையோ எதிர்பார்த்து அது நடக்காது எனத் தெரிந்ததும் ஓட்டம்பிடித்ததாக கூறுகின்றனர் பாமகவினர்.

பாதுகாவலர்

பாதுகாவலர்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸிடம் 6 ஆண்டுகள் மெய்க்காப்பாளராக பணியாற்றி வந்தவர் சுனில். அவருக்கு தேவையான பணிவிடைகளையும் இவர் தான் கவனித்து வந்தார். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ராமதாஸ் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டபோது சுனிலும் கைதாகி அவருக்கு தேவையான உதவிகளை சிறைக்குள்ளும் செய்தார்.

குழந்தைக்கு பெயர்

குழந்தைக்கு பெயர்

இதுமட்டுமல்லாமல் தனது குழந்தைக்கு பெயர் வைக்க ராமதாஸை வீட்டுக்கு அழைத்து வந்ததோடு ஊழியர் என்பதை கடந்து அவரது தீவிர விசிறியாகவும், விசுவாசியாகவும் இருந்தவர் தான் சுனில். இப்படிப்பட்ட இவர் தான் திமுகவில் இணைந்து பாமகவுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். மேலும், தன்னுடன் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்களையும் திமுகவுக்கு அழைத்துச்சென்றிருக்கிறார்.

ராமதாஸ் செயல்பாடு

ராமதாஸ் செயல்பாடு

இதனிடையே ராமதாஸ் செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டதாலும், கருத்துவேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து பிரிந்து செல்வது என்றும் முடிவெடுத்த சுனிலை பாமக தரப்பில் யாரும் தடுக்கவில்லை. பணிவிடையாளர் என்பதை கடந்து சுனிலை மரியாதையோடு நடத்தியவர் ராமதாஸ் என்றும் அதற்கு அவர் காட்டும் நன்றிக்கடன் தான் இதுவோ எனவும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர் பாமகவினர்.

கட்சி நிகழ்ச்சிகள்

கட்சி நிகழ்ச்சிகள்

இதனிடையே ராமதாஸிடம் மெய்க்காப்பாளராக பணியாற்றிய 6 ஆண்டு காலமும் சுனிலுக்கு கட்சியில் நல்ல மதிப்பு இருந்திருக்கிறது. பொதுக்கூட்டங்கள், கட்சி நிகழ்ச்சிகள் என ராமதாசுடன் உடன் பயணிக்கும் வாய்ப்பை பெற்றிருந்ததால் இவர் மூலமே அவரது நடவடிக்கைகள அறிந்து வந்தனர் பாமகவினர். ராமதாஸ் புறப்பட்டுவிட்டாரா, எந்த இடத்தில் வந்துகொண்டு இருக்கிறார் என்பன உள்ளிட்ட விவரங்களை கட்சியினருக்கு தெரிவித்து வந்திருக்கிறார் சுனில். இதில் தான் சில சங்கடங்கள் ஏற்பட்டு சுனில் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+