சின்ன சின்ன ஆசை.. குழந்தையாய் மாற ஆசை.. கவலைகள் மறந்து கொள்ளு பேரன் பேத்திகளுடன் விளையாடிய ராமதாஸ்
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தனது கொள்ளுப் பேரன் பேத்திகளுடன் கவலைகள் மறந்து மகிழ்ச்சியாக பொழுதை கழித்த தருணத்தை புகைப்படம் வடிவம் வெளியிட்டுள்ளார்.
மேலும், தனக்கிருக்கும் ஆசைகள் அனைத்தையும் சின்ன சின்ன ஆசை என்ற தலைப்பில் மனம் திறந்து தெரியப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த விவரம் பின்வருமாறு;
சின்ன சின்ன ஆசை... சிறகடிக்க ஆசை!
என்ன இந்த பூமி? என்பதையறிய
எனது கொள்ளுப்பேரன்,
பேத்திகளுடன் சுற்றி வர ஆசை
வீட்டுக்குள் நடக்கும் ஓட்டப்பந்தயத்தில்
அவர்களை முந்தும் வேகத்தில் ஓடி,
அவர்களிடமே கைத்தட்டல் வாங்க ஆசை!
எனக்கிருக்கும் கொள்ளுப்பேரன், பேத்திகள்
நால்வருடன் சேர்ந்து ஐந்தாவதாக நானும்
ஒரு குழந்தையாக மாறி குதூகலிக்க ஆசை!
கொள்ளுப்பேரன், பேத்திகளுடன் சேர்ந்து
கற்பனை விமானத்தில் விண்ணுக்குப்
பறந்து நிலவைத் தொட்டுவிட ஆசை!
அங்கு பல நூற்றாண்டுகளாக வடை
சுட்டு விற்கும் பாட்டியிடம் உங்களின்
வாடிக்கையாளர் யார்? என்று கேட்க ஆசை!
கரு மேகங்களாக மாறி பூமி மீது மாதம் மும்மாரி
மழையாய் பொழிந்து மக்களை நனைக்க,
உழவர்களை மகிழ்ச்சிப்படுத்த ஆசை!
மருத்துவம் படிக்க விரும்பும்
மாணவர்களைக் கொல்லும்
நீட் தேர்வைக் கொல்ல ஆசை!

சிறுதானியங்களான கம்பு, ராகி, சோளம்,
தினை, வரகு, சாமை, குதிரைவாலி ஆகியவை
அமோகமாக விளைவதை பார்க்கத் தான் ஆசை!
அவ்வாறு விளைந்த சிறு தானியங்களை
கிழமைக்கு ஒன்றாக மக்கள் தின்று நோயின்றி
வாழ்வதைக் கண்டு மகிழத் தான் ஆசை!
சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் மறைந்து
எங்கும் மிதிவண்டிகளில் மக்கள் உற்சாகமாக
பயணிப்பதைக் கண்டு சபாஷ்' சொல்ல ஆசை!
மகிழ்ச்சியுடன் மனைவி ஈன்றெடுத்த குழந்தை
பெண்ணாக பிறந்து விட்டதே; பிள்ளையாக பிறக்க வில்லையே
என்று புலம்பும் ஜென்மங்களின் தலையில் ஓங்கிக் கொட்ட ஆசை!
இவ்வாறு ஒரு குழந்தையாகவே மாறி தனது உள்ளத்தில் இருக்கும் ஆசைகளை நயம்பட எடுத்துரைத்துள்ளார் ராமதாஸ். மரம் வளர்ப்ப்பதற்கும், குடும்ப உறவுகளுடன் நேரம் செலவிடுவதற்கும் ராமதாஸ் எப்போதுமே நேரம் ஒதுக்க தவறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications