அய்யா தான் குலதெய்வம்.. அன்புமணி எதிர் காலம்! பாமக இளைஞரணி தலைவர் பதவியில் இருந்து முகுந்தன் விலகல்!
சென்னை: பாமகவில் உட்கட்சி மோதல்களுக்கிடையே செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், மகனும் பாமகவின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதற்கிடையில் பாமக இளைஞர் சங்க தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக முகுந்தன் பரசுராமன் கடிதம் அனுப்பி இருக்கிறார். ராமதாஸ் குலதெய்வம் எனவும், அன்புமணி கட்சியின் எதிர்காலம் எனவும் கருதி பணியாற்றுவேன் என அதில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கும் நிலையில் திமுக, அதிமுக கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் பாமக கட்சியிலோ உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. இளைஞர் அணி தலைவர் பதவி விவகாரம் தொடர்பாகத் தான் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் வலுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தலைமை பண்பு இல்லை, தாயை அடிக்க வந்தார் என பல்வேறு பரபரப்பான குற்றச்சாட்டுகளை ராமதாஸ் சுமத்தி இருக்கும் நிலையில் கட்சியினர் இடையே ஒருவித குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகலாம் என்று பார்த்தால் தந்தை மகன் பிரச்சினையே பெரிதாக இருக்கும் போலயே என புலம்புகின்றனர் பாமகவினர் அதே நேரத்தில் 108 மாவட்ட செயலாளர்களில் எட்டு பேர் மட்டுமே தன்னை சந்திக்க வந்தார்கள் என ராமதாஸ் கூறியிருப்பது கட்சியில் அன்புமணியின் செல்வாக்கு அதிகரித்திருப்பதை காட்டுகிறது என்கின்றனர் அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்கள். இந்த நிலையில் பாமகவில் பிரச்சனைக்கு காரணமானவர்களில் ஒருவர் என கூறப்படும் முகுந்தன் பரசுராமன் இளைஞர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக அன்புமணிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எனக் குறிப்பிட்டு எழுதியுள்ள கடிதத்தில்,"பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவராக கடந்த 28.12.2024ஆம் நாளில் நான் நியமிக்கப்பட்டேன். சொந்த காரணங்களுக்காக அந்த பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன். மருத்துவர் அய்யா அவர்கள் தான் என்றென்றும் எனது குலதெய்வம். மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகிய தாங்கள் தான் எங்கள் எதிர்காலம் என்ற உணர்வுடன் தொடர்ந்து கட்சி பணியாற்றுவேன்" என உறுதியளிக்கிறேன் என அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications