பாமக பஞ்சாயத்தின் ’சூத்திரதாரி’.. சண்டையை மூட்டி விட்ட பெண் நர்ஸ்? தகித்த தைலாபுரம்.. பரபர தகவல்
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் அடுத்தடுத்து பிரச்சினைகள் ஏற்பட்டு வரும் நிலையில், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்த நிலையில் ஜிகே மணி தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் என தகவல்கள் உலாவிய நிலையில், அவரும் ஒரு காரணம் என்கின்றனர் பாட்டாளிகள். மேலும் இதனையெல்லாம் பின்னணியில் இருந்து இயக்குவது தைலாபுரம் வீட்டில் இருக்கும் ஒரு பெண் எனவும் ஒருவரை கை காட்டுகின்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சியில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பிரச்சனை நடந்து கொண்டு தான் இருக்கிறது. பிற கட்சிகள் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகளிலும் எத்தனை சீட்டுகளை கூடுதலாக கேட்டுப் பெறலாம் என ஆலோசனை நடத்தி வருகிறது. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியிலோ யார் தலைமை என்ற மோதல் வெடித்திருக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான ராமதாஸ் கட்சியின் தலைவரான அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கியதோடு செயல் தலைவராக நியமிப்பதாக அறிவித்ததில் இருந்தே பிரச்சனை தீவிரமடைந்திருக்கிறது. அதற்குப் பிறகு நடந்த வன்னியர் சங்க மாநாட்டிலும் ராமதாஸ் பேச்சு கட்சிக்குள்ளும் பொது வெளியிலும் புயலை கிளப்பியது.

அன்புமணி ராமதாஸோ, ராமதாஸின் கனவை நிறைவேற்றுவோம்.. ஐயா வழியில் நடப்போம் என கூறி இருந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மேலும் அன்புமணியின் தாயை அடிக்க பாய்ந்தார், பாட்டிலை வீசினார் என்றெல்லாம் அவர் கூறிய கருத்துக்கள் பொதுவெளியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்து சில நிர்வாகிகளை நீக்கி ராமதாஸ் உத்தரவிட்ட நிலையில் அவர்களை கட்சியில் மீண்டும் சேர்த்ததாக அன்புமணி ராமதாஸ் பதில் அறிக்கை வெளியிட்டார்.
இப்படியாக அடுத்தடுத்து பல நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கும் நிலையில் கட்சியின் பொதுக்குழு விரைவில் கூட்டப் படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்கள் பொதுக்குழுவை கூட்டி அவர்தான் கட்சியின் தலைவர் என அங்கீகரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க கட்சியில் பிரச்சனைக்கு யார் காரணம் என்ற கேள்வியும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
கட்சியின் கௌரவ தலைவரான ஜிகே மணியை சில பாட்டாளிகள் காட்டினர். தலைவர் பதவியை தன்னிடமிருந்து பறித்தது, மகனை இளைஞரணி தலைவர் பதவியில் இருந்து நீக்கியது என அன்புமணி ராமதாஸ் மீது ஜிகே மணி கோபத்தில் இருப்பதாகவும் அதனால் ராமதாஸ் மூலம் அவர் ஓரம் கட்டப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதனை மறுத்த ஜிகே மணி நிச்சயம் ராமதாஸ் அன்புமணி இணைவார்கள், பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான் அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. நடக்கும் பிரச்சனைகளுக்கு எல்லாம் மூலகாரணம் ராமதாஸும் இல்லை, ஜிகே மணியும் இல்லை, தைலாபுரத்தில் இருக்கும் ஒரு முக்கிய பெண் என்கின்றனர். ஆனால் அவர் குடும்பத்தை சார்ந்தவர் இல்லை எனவும் சொல்லப்படுகிறது. அன்புமணி ராமதாஸ் மீது அவரது தாய் சகோதரிகள் மிகுந்த பாசம் வைத்திருப்பார்களாம். அன்பு தான் எங்களுக்கு எல்லாமே என சகோதரிகள் இருவரும் கூறுவார்கள். ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் மோதல் ஏற்பட்டபோது கூட ராமதாஸின் மகளும் அன்புமணியின் சகோதரியுமான காந்திமதி தான் ராமதாஸை சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால் தைலாபுரத்தில் இருக்கும் ஒரு பெண் செவிலியர் தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் எனவும் கட்சி மற்றும் அறக்கட்டளை சொத்துக்கள் தொடர்பாக அவர் தான் தந்தை மகனிடையே பிரச்சினையை மூட்டி விடுவதாக சொல்கின்றனர். மேலும் ராமதாசை தவறாக வழி நடத்துவதும் அவர்தான், அவருக்கு எழுதிக் கொடுத்து படிக்க வைப்பதும் அவர் தான் என புலம்பி தீர்க்கின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications