ஜிகே மணியை தூக்குங்க.. சட்டசபையில் போராட்டத்தில் குதித்த பாமக எம்எல்ஏக்கள்? சபாநாயகர் என்ன முடிவு?
சென்னை: பாமக உட்கட்சி விவகாரம் தற்போது சட்டசபை வரை வந்திருக்கிறது. பாமக சட்டமன்ற குழு தலைவராக இருந்த ஜிகே மணி, கொறடாவாக இருந்த அருள் ஆகியோரை நீக்கிவிட்டதாகவும் அன்புமணி ஆதரவாளர்களை பாமக சட்டமன்ற குழு தலைவர் மற்றும் கொறடாவாக நியமிக்க கோரி அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று மாலை முடிவு எடுக்கப்படுமென கூறியுள்ளார் சபாநாயகர் அப்பாவு.
தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது பாமக கட்சியின் உள் குழப்பம். கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தற்போதைய தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையிலான கருத்து வேறுபாடுகள் கடந்த சில மாதங்களாக உச்சத்தில் இருக்கும் நிலையில், பாமக இரண்டு அணிகளாகப் பிரிந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு, பாமக சட்டமன்றக் குழுத் தலைவராக இருந்த ஜி.கே.மணியை நீக்க வேண்டும் என்று அன்புமணி தரப்பினர் சட்டமன்றத் தலைவர் மு.அப்பாவுவிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், இன்று தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கிய நிலையில், அன்புமணி அணியைச் சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள், சட்டமன்ற வளாகத்தில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாமக உள்கட்சி மோதல்
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். எனவே சட்டமன்றத்தில் அவரின் தலைமையிலேயே பாமக எம்எல்ஏக்களுக்கு தனி இருக்கை ஒதுக்க வேண்டும். பாமக சட்டமன்ற குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் கொறடாவுக்கு அதிகாரபூர்வமான இருக்கை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாமக எம்எல்ஏ வெங்கடேசன், "நாங்கள் சபாநாயகர் அப்பாவுவிடம் நமது கோரிக்கையை வலியுறுத்தியுள்ளோம். அவர் 'மாலை நேரத்தில் இதுகுறித்து பேசிக் கொள்ளலாம்' என்று கூறியுள்ளார். விரைவில் எங்களுக்கு தனி இடம் ஒதுக்கப்படும் என நம்புகிறோம்," என்றார்.
அன்புமணி ராமதாஸ்
பாமக பொதுக்குழுவில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, அன்புமணி மற்றும் அவரது குழுவினரின் பதவிக்காலம் ஆகஸ்ட் 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த தீர்மானம் தேர்தல் ஆணையத்திடம் அனுப்பப்பட்டு, அது அங்கீகரிக்கப்பட்டதும், அதன் நகல் சட்டமன்ற செயலாளரிடம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம், "மாம்பழம்" சின்னம் மற்றும் வேட்பாளர்களின் சின்ன ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை அன்புமணிக்கே ஒதுக்கியுள்ளது. இந்தச் சூழலில், "ஜி.கே.மணி பாமகவில் நீண்டகாலம் பணியாற்றியவர் என்றாலும், அண்மையில் கட்சிக்கு எதிராக பேசியதால் சட்டமன்றக் குழுத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்படவில்லை," என அன்புமணி அணியினர் விளக்கம் அளித்துள்ளனர்.
ஜிகே மணி
மேலும், கடந்த ஜூலை 3 அன்று பாமகவின் விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட சேலம் மேற்கு எம்எல்ஏ அருளை கொறடா பொறுப்பிலிருந்து நீக்கி, சிவக்குமாரை கொறடாவாக நியமிக்கும் கடிதத்ததை ஏற்கனவே அன்புமணி தரப்பு தலைமைச் செயலகத்தில் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாமக பிரிவு
தற்போது பாமக சட்டமன்ற உறுப்பினர்களுக்குள் ஏற்பட்டுள்ள இந்த பிளவு, எதிர்கால கூட்டணிக் கணக்குகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அன்புமணி தலைமையில் பாமக அதிகாரபூர்வ அங்கீகாரம் பெற்றது உறுதியாகிவிட்ட நிலையில், ஜி.கே.மணி தலைமையிலான குழு எவ்வாறு எதிர்வினையாற்றும் என்பது தான் பாமகவினரிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
-
ராமதாசுக்கு அதிர்ச்சி! பாமகவின் மாம்பழம் சின்னம் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. அன்புமணி குஷி! -
மாம்பழத்தின் ‘மாஸ்டர் பிளான்’.. திருப்போரூரில் தடம் பதிக்கிறார் சௌமியா அன்புமணி? பாமக மேஜர் முடிவு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications