ஓட்டுப் பொறுக்கி அரசியல் செய்யும் பாமக.. பாஜகவின் நாடக அரசியலை காப்பி அடிக்கிறது.. திருமா அட்டாக்!
சென்னை : ராமதாஸ் சொல்வது போல ஓட்டுப் பொறுக்கி அரசியலைச் செய்து வருவது பாமக தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாஜகவைப் போலவே வெறுப்பைப் பரப்பி ஓட்டுகளைத் திரட்டும் வேலையையே பாமக செய்து வருகிறது எனச் சாடிப் பேசியுள்ளார் திருமாவளவன் எம்.பி.
செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவனிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

மநுஸ்மிருதி - மோதல் முயற்சியா?
விசிக சார்பில் மநுஸ்மிருதி வழங்கப்படும் போராட்டம் மோதலை உருவாக்கக்கூடும் என்ற குற்றசாட்டுக்கு பதிலளித்த திருமாவளவன், "துண்டறிக்கை போல நாங்கள் மனுஸ்மிருதி நூலின் ஒரு பகுதியைத் தொகுத்து விநியோகிக்க இருக்கிறோம். அது நாங்கள் அறவழியில், அமைதி வழியில் மேற்கொள்கிற ஒரு பிரச்சார நடவடிக்கை. அவர்கள் போராட்டம் நடத்தும் இடங்களுக்கு நாங்கள் போகப்போவதில்லை. பொதுமக்கள் கூடும் இடங்களில் பேருந்து நிலையங்களில், ரயில் நிலையங்களில், உணவு விடுதிகளின் வாசல்களில் நாங்கள் மநுஸ்மிருதி புத்தகங்களை விநியோகிக்க இருக்கிறோம். இது விழிப்புணர்வு பிரசாரம் தான். யாருக்கும் எதிரான வெறுப்பு பிரசாரம் அல்ல." எனத் தெரிவித்தார்.

ராம்குமார் - சாதி முத்திரை
சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இறந்த ராம்குமார் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது பற்றிப் பேசிய திருமாவளவன், "இதைத்தான் நான் தொடக்கத்தில் இருந்தே சொல்லி வருகிறேன். என்னை சாதி முத்திரை குத்தி ஓரங்கட்டினார்கள். எனக்கு எதிரான அவதூறுகளைப் பரப்பினார்கள். இன்று மாநில மனித உரிமைகள் ஆணையம் நியாயங்களைப் புரிந்துகொண்டு மீண்டும் விசாரிக்க வேண்டுமென பரிந்துரைத்திருப்பதை வரவேற்கிறேன். அந்த குடும்பத்திற்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தேன். இப்போது 10 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருப்பதை வரவேற்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.

திலகவதி - ஆகாஷ் வழக்கு
கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய கல்லூரி மாணவி திலகவதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆகாஷை விடுதலை செய்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது பற்றிய கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், "ஆகாஷ் விவகாரத்தில் பாமக நாடக அரசியல் செய்கிறது, அப்பாவி தலித்களை பழிவாங்குவதில் குறியாக இருக்கிறது, சாதி இந்துக்களை தூண்டி ஓட்டு வங்கிக்காக, அவரே சொல்வது போல ஓட்டுப் பொறுக்கி அரசியலைச் செய்கிறது பாமக என்று தொடர்ந்து கூறி வந்தோம்.

ஓட்டுப்பொறுக்கி அரசியல்
பாமக ஓட்டு வங்கி அரசியல் செய்வதை நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது. எந்தளவுக்கு சாதி சண்டையைத் தூண்டுவதற்கு அப்பாவி தலித்களையும், அப்பாவி வன்னியர்களையும் மோத விடுவதற்கு பாமக, பாஜகவைப் போலவே செயல்படுகிறது, பாமக ஆர்.எஸ்.எஸ் போலவே செயல்படுகிறது என்பதை இந்த நீதிமன்ற தீர்ப்பு உணர்த்தி இருக்கிறது, உறுதிப்படுத்தி இருக்கிறது.

நாடக அரசியல்
அவன் அந்த சாதி, நம் வீட்டு பெண்ணை கிண்டல் செய்துவிட்டான் என தலித்களுக்கு எதிராக வெறுப்பைப் பரப்பி சாதி இந்துக்களை ஒன்று திரட்டுவது பாமகவின் நாடக அரசியல். பாஜகவின் நாடக அரசியல், முஸ்லீம் வெறுப்பு. பாஜக செய்யும் முஸ்லீம் வெறுப்பைப் போல பாமக தலித் வெறுப்பை பரப்புகிறது. பாஜக சொல்லும் லவ் ஜிகாத் போல பாமக நாடக காதல் என கையில் எடுக்கிறது. சாதி ரீதியாகவோ, மத ரீதியாகவோ மக்களைத் தூண்டிவிட்டு அவர்களை வாக்கு வங்கியாகத் திரட்டுவதுதான் பாஜகவின் சோசியல் என்ஜினியரிங். அதைத்தான் பாமக காப்பி அடிக்கிறது." எனத் தெரிவித்தார்.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. வேலையைக் காட்டிய விசிக! விஜய்க்கு பெரிய தலைவலி! திமுகவின் ப்ளானா? -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications