உங்களை ஏன் கட்சியை விட்டு தூக்கக் கூடாது? ஜிகே மணிக்கு ஷாக் கொடுத்த அன்புமணி! பறந்த பாமக கடிதம்!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் நாளுக்கு நாள் மோதல் முற்றி வரும், நிலையில் கட்சியிலிருந்து விலகக் கூட தயாராக இருப்பதாக சமீபத்தில் பேசி இருந்தார் ஜி.கே.மணி. இந்த நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு வரும் அவரை ஏன் நீக்க கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பாமக கூறியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் இடையே மோதல் நிலவுகிறது. நான் தான் பாமக என நிறுவனர் ராமதாஸ் கூறி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் தங்களைத் தான் அங்கீகரித்துள்ளதாக கூறுகிறார் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்.
இந்த நிலையில் தந்தை மகனுக்கு இடையேயான மோதலுக்கு ஜிகே மணி தான் காரணம் எனவும் தங்களுக்குள் பிரச்சினையை ஏற்படுத்துவதாக சமீபத்தில் பேசியிருந்தார் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான அன்புமணி ராமதாஸ்.

பாமக உட்கட்சி மோதல்
இதற்கிடையே சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜி.கே மணி தந்தை மகனுக்கு இடையேயான பிரச்சனைக்கு தான் காரணம் இல்லை எனவும், யாரெல்லாம் துரோகிகள் என அன்புமணி நினைக்கிறாரோ அவர்களெல்லாம் கட்சியை விட்டு விலக தயார் என்றும், தனது எம்எல்ஏ பதவியை கூட ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக பேசியிருந்தார்.
அன்புமணி ராமதாஸ் நடவடிக்கை
இந்த நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு வரும் ஜிகே மணியை ஏன் கட்சியை விட்டு நீக்கக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தரப்பு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதுதொடர்பாக பாமக வெளியிட்டுள்ள அறிவிப்பில்," பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. ஜி.கே.மணி அவர்கள் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார்.
ஜிகே மணிக்கு நோட்டீஸ்
அவரது அண்மைக்கால செயல்பாடுகள் எல்லைக் கடந்தவையாக இருப்பதால், அதற்காக அவர் மீது கட்சியின் அமைப்பு விதி 30இன்படி நடவடிக்கை எடுப்பது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சென்னையில் நேற்று (17.12.2025) புதன் கிழமை கூடி விவாதித்தது. அப்போது ஜி.கே.மணி அவர்களின் கீழ்க்கண்ட இரு கட்சி விரோத நடவடிக்கைகள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்க தீர்மானிக்கப்பட்டது.
அன்புமணி இராமதாஸ்
1. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளையும், அவதூறுகளையும் கூறி, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த திசம்பர் 6ஆம் தேதி தில்லி காவல்துறை துணை ஆணையரிடம் புகார் அளித்தது மற்றும் நேர்காணல் அளித்தது.
பாட்டாளி மக்கள் கட்சி
2. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் கடந்த திசம்பர் 15&ஆம் நாள் சென்னையில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தது.
ஒழுங்கு நடவடிக்கைக் குழு
மேற்கண்ட இரு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி ஜி.கே.மணி அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது." எனக் கூறப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications