வீணாகும் காவிரி நீர்.. இந்த தண்ணீரை வைத்து இத்தனை திட்டங்களை செயல்படுத்தலாம்! ரமணா ஸ்டைலில் அன்புமணி
சென்னை: கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு இருக்கும் நிலையில், சென்னையில் ஓராண்டு தேவை குடிநீரை ஒரே நாளில் வீணாக கடலுக்கு அனுப்பும் அவலம் ஏற்பட்டுள்ளதாகவும், காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்டப்படுமா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தென்மேற்குப் பருவமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக இந்த நீர்த்தேக்கங்கள் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், தமிழகத்துக்கு நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரானது, காவிரியில் திருச்சி வழியாக டெல்டா மாவட்டங்களை கடந்து நாகை அருகே கடலில் கலக்கிறது. தற்போது கொள்ளிடத்தை தவிர தடுப்பணைகள் இல்லாததால், ஏராளமான நீர் வீணாகக் கடலில் கலப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் ஓராண்டு தேவை குடிநீரை ஒரே நாளில் வீணாக கடலுக்கு அனுப்பும் அவலம் ஏற்பட்டுள்ளதாகவும், காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்டப்படுமா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,: கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் நிரம்பி, மேட்டூர் அணைக்கு மிக அதிக அளவில் தண்ணீர் வருவதால் அணைக்கு வரும் தண்ணீரை விட கூடுதலாக வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 15 டி.எம்.சி காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது. காவிரி நீர் இந்த அளவுக்கு வீணடிக்கப்படுவது கண்ணீரை வரவழைக்கிறது.
சென்னையின் குடிநீர் தேவைக்கு ஓர் ஆண்டுக்கு தேவைப்படும் தண்ணீரின் அளவு -15 டி.எம்,.சி, சென்னைக்கு ஓராண்டுக்குத் தேவையான தண்ணீரை ஒரே நாளில் வீணாக்குகிறது தமிழக அரசு, தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டத்திற்கு ஆண்டுக்கு தேவைப்படும் தண்ணீரின் அளவு - 2 டி.எம்.சி இந்த நீரை வெறும் 3 மணி நேரத்தில் வீணாக்குகிறது தமிழக அரசு, மேட்டூர் உபரி நீர் திட்டத்திற்கு ( மேட்டூர் - சரபங்கா) தேவைப்படும் தண்ணீரின் அளவு - 0.555 டி.எம்.சி, இந்த நீரை வெறும் 50 நிமிடங்களில் வீணாக்குகிறது தமிழக அரசு
அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு தேவையான தண்ணீரின் அளவு - 1.5 டி.எம்.சி, இந்த நீரை வெறும் இரண்டே கால் மணி நேரத்தில் வீணாக்குகிறது தமிழக அரசு. காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு தேவையான தண்ணீரின் அளவு - 6.30 டி.எம்.சி, இந்த நீரை வெறும் 10 மணி நேரத்தில் வீணாக்குகிறது தமிழக அரசு.
மேட்டூர் அணைக்கு வெள்ளக் காலங்களில் வரும் கூடுதல் நீரை ஓரளவாவது சேமித்து வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் காவிரி, கொள்ளிடம் ஆகிய ஆறுகளின் குறுக்கே 10 கி.மீக்கு ஒரு தடுப்பணையை கட்ட வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதை செய்வதற்கு மாறாக 10 கி.மீக்கு ஒரு மணல் குவாரியை அமைத்து வருகிறது தமிழக அரசு. தமிழக அரசு எப்போது விழித்துக் கொள்ளப் போகிறது? எப்போது தடுப்பணைகளை கட்டப் போகிறது?" என கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications