திமுக கூட்டணியா? “அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும்”.. ட்விஸ்ட் வைத்த ராமதாஸ்!
சென்னை: திருமாவளவன் உள்ள கூட்டணியில் இடம் பெறுவீர்களா என்ற கேள்விக்கு, "அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும், எதிர்பாராததும் நடக்கும்" என பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார். அன்புமணி அதிமுக உடன் கூட்டணியை உறுதி செய்த நிலையில், ராமதாஸின் இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக - அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ளதாக அன்புமணி அறிவித்துள்ள நிலையில், சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோர் விருப்ப மனு அளிக்கும் நிகழ்ச்சியை இன்று தொடங்கி வைத்த பாமக நிறுவனர் ராமதாஸ், இந்த தேர்தலில் பாமக செயல் தலைவர் காந்திமதி போட்டியிடுவார் என அறிவித்துள்ளார்.

தைலாபுரத்தில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "அன்புமணி கூட்டம் ஒப்பந்தம் போட்டாரா, கையெழுத்து போட்டாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால் நான் தொடங்கிய கட்சியை யாரும் உரிமை கொண்டாட தகுதியில்லை. அன்புமணி எனக்கே வேட்டு வைப்பார் என்று எனக்கு முன்பே தெரியவில்லை. இந்திய அளவில் அங்கீகாரம் பெறும் அளவிற்கு பாமகவை வளர்த்திருக்கிறேன்.
கடும் எதிர்ப்பை மீறித்தான் அன்புமணியை கட்சியில் சேர்த்து மத்திய அமைச்சர் ஆக்கினேன். தற்போது அன்புமணி செய்த தில்லுமுல்லு காரணமாகவே பாமகவில் இருந்து நீக்கினேன். என்னிடம் இருந்து கட்சியை பறிப்பதற்கு சதித்திட்டம் தீட்டி சூழ்ச்சியோடு அன்புமணி செயல்படுவதை மக்கள் அறிவார்கள். அன்புமணிக்கு கொஞ்சம் கூட தலைமைப் பண்பு இல்லை. பாமக என்னிடம் மட்டும்தான் உள்ளது. ஒரு நபர், ஒரு கட்சியோடு பேசி கூட்டணி அமைத்துள்ளார்.
அன்புமணி நிறுத்தும் வேட்பாளர்களுக்கு மக்கள் ஓட்டு போட மாட்டார்கள். தந்தைக்கே துரோகம் செய்த அன்புமணி கும்பலுக்கா வாக்களிக்க வேண்டும் என மக்கள் நினைப்பார்கள். அன்புமணி எடப்பாடி பழனிசாமி கூட்டணி பேசியது நீதிமன்ற அவமதிப்பாகும். என் தலைமையில் தான் கூட்டணி பேச முடியும். நான் அமைப்பதே பாமக கூட்டணி. நான் சேரும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்.
அதிமுக தரப்பில் இருந்து இதுவரை கூட்டணி குறித்து யாரும் பேசவில்லை . 2 நாட்களில் மூத்த தலைவர்களுடன் கலந்தாலோசித்து யாருடன் கூட்டணி என்பது குறித்து அறிவிக்கப்படும். நான்கு ஆண்டுகால மு.க. ஸ்டாலின் ஆட்சி நன்றாகதான் இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், திருமாவளவன் உள்ள கூட்டணியில் நீங்கள் இடம்பெறுவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த ராமதாஸ், "அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும், எதிர்பாராததும் நடக்கும். எதுவுமே நடக்காது என்று சொல்ல முடியாது" எனக் கூறியுள்ளார். அன்புமணி அதிமுக உடன் கூட்டணியை உறுதி செய்த நிலையில் ராமதாஸின் இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை திமுக அரசு திரும்ப கொண்டுவந்ததை ராமதாஸ் வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், முதல்வர் ஸ்டாலினை தாக்கி கருத்து தெரிவிப்பதை தவிர்த்து வருகிறார். இதனால், அன்புமணிக்கு போட்டியாக, அவர் திமுக கூட்டணியில் இணையக்கூடுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்து சென்ற நிலையில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அவரது தமிழக வருகையின்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்தார். அடுத்த நாளே எடப்பாடி பழனிசாமி, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை ஆளுநரிடம் சமர்ப்பித்து நடவடிக்கை கோரினார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் எடப்பாடி பழனிசாமியை, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் பாமக தலைவர் அன்புமணி நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் அதிமுக - பாமக இடையிலான தேர்தல் கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "எங்கள் கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் இருக்கும் எங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் விரைவில் சேர்க்கப்படும். எங்கள் கூட்டணி இயற்கையான கூட்டணி, வெற்றிக் கூட்டணி." எனத் தெரிவித்தார்.
ஆனால், இந்த கூட்டணியை ஒரு 'நாடகம்' என விமர்சித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். தானே அக்கட்சியின் நிறுவனர் எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தன்னுடைய தலைமையில்தான் கூட்டணி குறித்து பேச முடியும் என்றும் தான் அமைக்கும் கூட்டணி தான் ஆட்சியமைக்கும் என்றும் ராமதாஸ் தெரிவித்தார். அன்புமணி கூட்டணி பேசியிருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். அப்படி ஒரு கூட்டணி பேச்சு நடந்திருந்தால் அது சட்ட விரோதம் என ராமதாஸ் கூறியுள்ளார்.
ராமதாஸை கலந்தாலோசிக்காமல், அனுமதி பெறாமல் விதி 13-யின்படி எந்தவொரு கூட்டமும் நடத்தப்பட கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. அதை மதிக்காமல் அன்புமணி தரப்பு பொதுக்குழு எனும் பெயரில் கூட்டம் நடத்தியது சட்ட விரோதம் என செய்தியாளர் சந்திப்பில் ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ அருள் தெரிவித்தார்.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி












Click it and Unblock the Notifications