மிட்நைட்டில்.. சொந்த வீட்டில் கண்ணீர் அஞ்சலி.. ப்ரெசிடெண்டுக்கு நேர்ந்த கதி! வெகுண்ட பாமக தலைகள்
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஒருவருக்கு, அவரின் வீட்டிலேயே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பனங்காட்டு பாக்கம் ஊராட்சியில் பாமக வலுவாக உள்ளது. பாமக உறுப்பினர்கள் இங்கு பலர் உள்ளனர்.
வன்னியர்கள் இந்த பகுதியில் அதிகம் இருப்பதால், பல பாமக காட்சியிலும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதனால் பொதுவாக இங்கு பாமக சார்பாக போட்டியிட்டால் யாரும் எதிர்த்து போட்டியிட மாட்டார்கள்.

உள்ளாட்சி தேர்தல்
கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் இங்கு பாமகதான் வென்றது. பாமக சார்பாக தனசேகர் என்பவர் ஊராட்சி மற்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவர் போட்டியின்றி வென்றார். இங்கு பாமக சார்பாக ஒன்றிய செயலாளராக அருண் குமார் என்பவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு இங்கு உள்ள பாமக நிர்வாகிகள் பலர் திடீர் என்று திமுகவில் இணைந்தனர். சுமார் 2000 பேர் திமுகவில் இணைந்தனர்.

பாமக
பாமக வார்டு உறுப்பினர் அன்பரசன் உள்ளிட்ட பலர் திமுகவில் ஐக்கியம் ஆனார்கள். இது அங்கு இருந்த பாமக நிர்வாகிகள் இடையே கொதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் ஒன்றிய செயலாளர் அருண் குமார், ஊராட்சி மற்ற தலைவர் தனசேகர் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர். இது பாமகவினர் இடையே கடும் கொதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் நேற்று இரவோடு இரவாக ஒன்றிய செயலாளர் அருண் குமார், ஊராட்சி மற்ற தலைவர் தனசேகர் ஆகியோர் வீடுகளில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டது.

விமர்சனம்
இவர்களை கடுமையாக விமர்சனம் செய்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. நீங்கள் பலியாகிவிட்டீர்கள். அதனால் எங்களுக்கு மிகவும் சந்தோசம் என்று போஸ்டரில் எழுதப்பட்டு இருந்தது. இரவோடு இரவாக அவர்களின் வீட்டில் சத்தமின்றி இந்த போஸ்டரை பாமக தொண்டர்கள் ஒட்டி உள்ளனர். அதோடு அவர்களின் வீட்டை சுற்றி சேற்றை வாரி வீசி உள்ளனர். வீடு மீதும் சேற்றை வீசி உள்ளனர்.

கண்ணீர் அஞ்சலி
இது போக நேற்று இரவோடு இரவாக அவர்கள் வீட்டிற்கு வெளியே கொடும்பாவி எரித்து போராட்டம் செய்துள்ளனர். நீங்கள் பாமக என்பதால்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தனர். வெற்றிபெற்ற பின் நீங்கள் திமுகவில் சேர்ந்தால் என்ன நியாயம். அதனால்தான் உங்களுக்கு எதிராக போஸ்டர்களை ஒட்டி உள்ளோம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications