ஸ்டாலின் சொன்னதை கேட்டு நெஞ்சே உருகுது.. ஆளுநரை அவமதிக்கவே இல்லை! புகழ்ந்து தள்ளிய பாமக எம்எல்ஏ
சென்னை: முதலமைச்சர் முக ஸ்டாலின் உடல் நலனையும் பொருட்படுத்தாமல் இந்த சிறப்புக் கூட்டத்தை கூட்டி இருப்பதை நெஞ்சத்தை உருக்குவதாக பாமக எம்.எல்.ஏ. ஜிகே மணி தெரிவித்து உள்ளார்.
இன்று தமிழ்நாடு சட்டசபை சிறப்புக் கூட்டத்தில், ஆளுநர் திருப்பி அனுப்பிய சட்ட முன்வடிவுகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 143 இன் கீழ் மறு ஆய்வு செய்திடும் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றி வருகிறார்கள். அப்போது பேசிய ஜிகே மணி, "எனக்கு காய்ச்சல், உடல் வலி, உடல்நலக் குறைவு என்று இருந்தால் கூட தமிழ்நாட்டின் நலன் கருதி, தமிழ்நாட்டின் முன்னேற்றம் கருதி இதை கொண்டு வந்து இருக்கிறேன் என்று சொன்னது நம்முடைய நெஞ்சத்தை உருக்கி இருக்கிறது.

எனவே நான் முதலில் வேண்டிக்கொள்வது எல்லாம் முதலமைச்சர் மீண்டும் பூரண உடல்நலத்துடன் முழு நிறைவோடு பணியாற்ற முன்வர வேண்டும் என்ற என்னுடைய ஆவலை வெளிப்படுத்த விரும்புகிறேன். முதலமைச்சர் ஸ்டாலின் இந்த தீர்மானத்தை முன்மொழிந்து வாசிக்கும் நேரத்தில் வரிசையாக வாசிக்கிறார்கள். அரசியல் நாகரீகம், பக்குவம், யாருடைய மனதும் புண்படாமல், ஆளுநர் அவர்களை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிடவில்லை.
இப்போதும் சொல்கிறோம், முதலமைச்சர் சொல்கிறார், பேரவைத் தலைவர் சொல்கிறார், நாங்களும் சொல்கிறோம். ஆளுநர் அவர்களை மதிக்கிறோம். ஆனால், தமிழ்நாட்டை மதிக்காத ஆளுநர் போக்கு ஏற்புடையதல்ல. இது தேவையற்றது என்பதுதான் இந்த தீர்மானத்தின் நோக்கமாக உள்ளது. பொதுவாக இந்த தனித் தீர்மானத்தை பார்க்கும் வேளையில் ஆளுநரின் செயல்பாடுகளை குறிப்பிடும்போது ஒட்டுமொத்தமாக நமக்கு கவலையளிக்கும் நிகழ்வாக, தமிழ்நாட்டின் உரிமையை மதிக்காத போக்கை காட்டுவதாகவே பார்க்கிறோம்.

தமிழ்நாட்டு சட்டமன்றம் விடுதலைக்கு முன்பும் விடுதலைக்கு பின்பும் இந்திய நாட்டுக்கே வழிகாட்டும் சட்டமன்றமாக இருந்து உள்ளது. இந்தியாவுக்கு அல்லது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள சட்டமன்றங்களுக்கு எடுத்துக்காட்டாக நம்முடைய தமிழ்நாடு சட்டமன்றம் திகழ்ந்து இருக்கிறது என்பதற்கு பல்வேறு முன் உதாரணங்கள் உள்ளன.
இந்திய நாட்டுக்கு வழிகாட்டக்கூடிய தலைவர்கள் அமர்ந்த அவை. அப்போது சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதங்கள், நிறைவேறிய தீர்மானங்களை எல்லாம் எண்ணிப் பார்க்கின்ற வேளையில், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய திருநாட்டில் இதுவரை எந்த ஆளுநரும் செய்யாத போக்காகவே இதை பார்க்க முடிகிறது. எந்த ஆளுநரும் இல்லை, ஏதோ அத்தி பூத்தார்போல ஒரு சில நிகழ்வுகள் நடந்து இருக்கலாம். அதுகூட மாற்றி அமைக்கப்பட்டதாக வரலாற்றில் பார்க்க முடிகிறது." என்றார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications