கன்னித்தீவு கதையாக நீளும் வாலாஜா - ஸ்ரீபெரும்புதூர் தேசிய நெடுஞ்சாலை பணிகள்! ராமதாஸ் கோரிக்கை
சென்னை: கன்னித்தீவு கதையாக நீளும் வாலாஜா- திருப்பெரும்புதூர் நெடுஞ்சாலைப் பணிகளை 6 மாதங்களில் முடிக்க நடவடிக்கை தேவை என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின், திருப்பெரும்புதூர் & வாலாஜா இடையிலான பகுதியை 6 வழிச்சாலையாக மாற்றுவதற்கான பணிகள் ஏற்கனவே பல ஆண்டுகள் தாமதமடைந்துள்ள நிலையில், திருப்பெரும்புதூர் & காரைப்பேட்டை இடையே சாலை விரிவாக்கப் பணிகள் கைவிடப்பட்டுள்ளன. இதனால், திருப்பெரும்புதூர் & வாலாஜா சாலைப் பணிகள் மேலும் தாமதமடையக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

சென்னை & பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை 6 வழிச் சாலையாக அமைக்கப்பட்ட நிலையில், சென்னை மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான 93 கி.மீ நீளச் சாலை 4 வழிப்பாதையாகவும், அதிக விபத்துகள் நிகழும் சாலையாகவும் உள்ளது. இது தொடர்பாக பல அறிக்கைகளை வெளியிட்டதுடன், மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு தொடர்ந்து கடிதங்களையும் எழுதினேன். அதன்பயனாக இச்சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கும் திட்டம் 2014-ஆம் ஆண்டில் அறிவிக்கப் பட்டு, ஒப்பந்தங்கள் விடப்பட்டு 2018-ஆம் ஆண்டின் இறுதியில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.
அடுத்த 3 ஆண்டுகளில் இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு, 2021&ஆம் ஆண்டில் போக்குவரத்துக்கு சாலை திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 6 ஆண்டுகள் நிறைவடைந்தும் கூட பணிகள் இன்னும் முடிவடையவில்லை. மொத்தம் 98 கி.மீ. நீள சாலையில், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்ட மதுரவாயல் முதல் திருப்பெரும்புதூர் வரையிலான 23 கி.மீ நீள சாலை விரிவாக்கப் பணிகள் முடிவடைந்துவிட்டன. மீதமுள்ள 70 கி.மீ நீள சாலையில், காரைப்பேட்டை முதல் வாலாஜா வரையிலான 36 கி.மீ நீளத்திற்கான பணிகள் 75% நிறைவடைந்து விட்டன. மீதமுள்ள பணிகளும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடைந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், காரைப் பேட்டை & திருப்பெரும்புதூர் இடையிலான பணிகள் இதுவரை 57% மட்டுமே நிறைவடைந்திருக்கும் சூழலில் தான் சாலை விரிவாக்கப்பணிகள் ஒப்பந்ததாரரால் முன்னறிவிப்பின்றி கைவிடப்பட்டிருக்கின்றன.
நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான நிலக்கரி சாம்பல் இலவசமாக கிடைக்காதது தான் திட்டப்பணிகள் கைவிடப்பட்டதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் நிலக்கரி சாம்பலில் 20 விழுக்காட்டை இலவசமாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட ஆணை, 2022&ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. அதன்பின் 6% நிலக்கரி சாம்பலை இலவசமாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்த ஆணையும் முறையாக செயல்படுத்தப்படவில்லை. இதனால், நிலக்கரி சாம்பலை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தினால் திட்டச் செலவு அதிகரித்து விடும் என்பதால் தான், திட்டப்பணிகளை ஒப்பந்ததாரர் திடீரென கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்கள் தான்.
காரைப்பேட்டை & திருப்பெரும்புதூர் இடையிலான பணிகள் ஏற்கனவே தாமதமாக நடைபெற்று வருகின்றன. திட்டப்பணிகள் நிறுத்தப்பட்டு விட்ட நிலையில், அதற்கான புதிய ஒப்பந்தத்தை கோரி, நிறைவு செய்வதற்கு இன்னும் 4 முதல் 5 மாதங்கள் ஆகலாம். அதன் பிறகு பணிகள் தொடங்கப்பட்டால் கூட, அப்பணிகள் நிறைவடைய குறைந்தது இன்னும் 2 ஆண்டுகளுக்கு மேலாகும் என்று கூறப்படுகிறது. 2021&ஆம் ஆண்டில் நிறைவடைந்திருக்க வேண்டிய பணிகள், 2024&ஆம் ஆண்டை கடந்தும் கன்னித்தீவு கதையைப் போல் அனுமதிக்க முடியாது. சாலைப் பணிகள் தாமதமாவதால் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.
வாலாஜா - திருப்பெரும்புதூர் இடையிலான சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கிய பிறகு 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான மூன்றரை ஆண்டுகளில், அதாவது 1277 நாட்களில் இந்த பகுதியில் மொத்தம் 786 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அதாவது ஒன்றரை நாட்களுக்கு ஒரு விபத்து நிகழ்ந்திருக்கிறது. இந்த விபத்துகளில் 79 பேர் உயிரிழந்துள்ளனர்; 761 பேர் படுகாயமடைந்து உயிர் பிழைத்துள்ளனர். 2022- ஆம் ஆண்டுக்கு பிந்தைய புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் விபத்து அதிகரித்துள்ளதாக தெரிகிறது.
வாலாஜா - திருப்பெரும்புதூர் நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகள் தாமதமடைந்து வருவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது. முழுமையான சுங்கக்கட்டணம் வசூலிக்கவும் தடை விதித்தது. அதன்பிறகும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும், ஒப்பந்ததாரர்களும் பாடம் கற்றுக் கொள்ளாதது வருத்தமளிக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும், தமிழ்நாடு அரசும் இந்தத் திட்டப்பணிகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்களை அழைத்துப் பேசி சாலை விரிவாக்கப் பணிகளை விரைவுபடுத்தி, அதிகபட்சமாக அடுத்த 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்க வேண்டும். அதுவரை அந்த சாலையில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதையும் நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications