மகனையும், மருமகளையும் இப்படி விமர்சிப்பார்களா? ராமதாஸ் பேசுவது அத்தனையும் பொய்.. அன்புமணி பதிலடி!
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுவது அத்தனையும் பொய் என்று அக்கட்சியின் செயல் தலைவர் அன்புமணி பதிலடி கொடுத்துள்ளார். தினமும் நிம்மதி இல்லாமல், தூக்கம் இல்லாமல் உள்ளதாக கூறிய அன்புமணி, பெற்ற மகனையும், மருமகளையும் யாராவது பொதுவெளியில் இப்படி விமர்சிப்பார்களா என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் கூறி வந்த கருத்துகளுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் அன்புமணி பதிலடி கொடுத்துள்ளார். கடந்த சில வாரங்களாகவே அன்புமணி மீது ராமதாஸ் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தார். பாஜகவுடன் கூட்டணி அமைக்க காரணம் அன்புமணி தான் என்றும், செளமியா தனது பேச்சை மீறி அரசியலுக்கு சென்றுவிட்டதாகவும் விமர்சித்தார்.

பாமக ஆலோசனை கூட்டம்
அதுமட்டுமல்லாமல் அன்புமணி ஆதரவாளர்களை பதவியில் இருந்து நீக்கிய ராமதாஸ், புதிய நிர்வாகிகளை நியமித்து ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அதேபோல் பாமகவின் சீனியர் நிர்வாகிகளான ஜிகே மணி, பாமக எம்எல்ஏ அருள் உள்ளிட்டோர் ராமதாஸ் பக்கமே நிற்கிறார்கள். இந்த நிலையில் பாமக சமூக ஊடக பிரிவு நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் அன்புமணி தலைமையில் நடைபெற்றது.
மகளுடன் வந்த அன்புமணி
இந்த ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி, தனது மகள் சங்கமித்ராவுடன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அன்புமணி பேசுகையில், பாமக நிறுவனர் ராமதாஸ் சரி என்று சொல்லியதால் தான் தைலாபுரம் தோட்டத்திற்கு பாஜகவினர் வந்தனர். அதன்பின் அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. தற்போது இல்லை என்று மறுக்கிறார்.
ராமதாஸ் பொய்கள்
ராமதாஸ் கூறுவது அத்தனையும் பொய். பாமகவில் முழு அதிகாரம் எனக்கு தான். பாமக சட்ட விதிகளின்படி பொதுக்குழுவை பாமக நிறுவனர் வழிகாட்டுதலின்படி கூட்ட வேண்டும் என்றுதான் உள்ளது. ஆனால் அதிகாரமிக்கவர் நிறுவனர் என்ற சட்டவிதி கிடையாது. பாமகவில் கொள்ளையடிப்பவனுக்கும், கொலை செய்பவனுக்கும் ராமதாஸ் பதவி வழங்குகிறார்.
அதிகாரம் யாருக்கு?
பாமகவில் பயிர் எது? களை எது? என்று இப்போதுதான் தெரிகிறது. பொதுக்குழுவை கூட்ட, கட்சியை நடத்த தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய மூவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. 2 மாதங்களாக பாமகவில் நடக்கும் நிகழ்வுகள் எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டன. நான் பேசாமல் இருப்பதால், ராமதாஸ் கூறும் கருத்துகள் மட்டுமே மேலோங்குவது போல் உள்ளது.
மருமகளை யாராவது விமர்சிப்பார்களா?
தெளிவுக்காக காத்திருந்தேன். உண்மையை என்னால் ஒவ்வொரு முறையும் பேச முடியும். எனது மனைவி பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர். தினமும், நிம்மதி இல்லாமல் தூக்கம் இல்லாமல் உள்ளேன். பெற்ற மகனையும், மருமகளையும் யாராவது பொது வெளியில் விமர்சிப்பார்களா? அவர் ராமதாஸாக இருந்திருந்தால் அப்படி பேசி இருப்பாரா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications