மாம்பழ சின்னத்தை என் தலைமையிலான பாமகவுக்கு ஒதுக்குங்க.. தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம்!
சென்னை: நான் தலைவராக உள்ள பாமகவுக்கு மாம்பழ சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதி இருக்கிறார். அன்புமணி உடனான மோதல் காரணமாக பாமக இரு பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில், மாம்பழ சின்னத்தை ஒதுக்கக் கோரி ராமதாஸ் கடிதம் எழுதி இருப்பது விவாதமாகி இருக்கிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையில் 8 மாதங்களுக்கும் மேலாக மோதல் தொடர்ந்து வருகிறது. பாமக தலைவர் அன்புமணி மற்றும் அவரின் மனைவி செளமியா அன்புமணி ஆகியோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்த ராமதாஸ், பின்னர் பதவியில் இருந்தும் நீக்கி அறிவித்தார். ஒவ்வொரு வாரமும் அன்புமணியை கடுமையாக சாடி வருகிறார்.

அதேபோல் பாமக தலைவர் பதவியை தாமே எடுத்துக் கொண்ட ராமதாஸ், செயல் தலைவராக மகள் காந்திமதியை நியமனம் செய்தார். இருந்தாலும் அன்புமணி எதையும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அவர் மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் தொகுதி வாரியாக சுற்றுப்பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக இவர்களின் மோதல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சட்டசபைத் தேர்தல் முன்பாக பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. நவம்பர் 12ஆம் தேதி முதல் இதற்கான பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனையொட்டி தவெக தரப்பில் இன்று காலை பொதுச்சின்னம் கோரி விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அந்தக் கடிதத்தில், நான் தலைவராக உள்ள பாமகவுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்க வேண்டும். சட்டசபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களில் மாம்பழ சின்னத்தில் போட்டியிட்டுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாமகவின் அடையாளம் மாம்பழ சின்னம் என்பதால், அதனை கைப்பற்றும் முயற்சியில் ராமதாஸ் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அன்புமணி தரப்பின் முடிவு என்னவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இரு தரப்பும் மாம்பழ சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை நாடினால், அந்த சின்னம் முடக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications