பாமகவில் டிசம்பர் 14 முதல் விருப்ப மனு விநியோகம்.. அன்புமணி அறிவிப்பு!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் போட்டியிட பாமக தரப்பில் டிசம்பர் 14ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகிக்கப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். டிசம்பர் 20ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை பாமகவினர் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறிய அன்புமணி, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பனையூர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. ஏற்கனவே பல்வேறு கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்துவிட்ட நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக முடிவு எடுக்க பேச்சுவார்த்தைகள் தொடங்கி இருக்கிறது.

ஆனால் பாமகவில் உட்கட்சி மோதல் உச்சத்தில் இருக்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் மோதல் தொடர்ந்து வரும் சூழலில், பாமக யாருக்கு எந்த போட்டி நடந்து வருகிறது. தேர்தல் ஆணையம் தரப்பில் அன்புமணி தரப்பு பாமகவுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கும் சூழலில், கடைசி நேரத்தில் மாம்பழ சின்னம் முடக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே அன்புமணி தரப்பு திமுகவே முதன்மை எதிரி என்று அறிவித்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அன்புமணியை தொடர்ந்து, அவர் மனைவி செளமியா அன்புமணியும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே அன்புமணி தரப்பில் பாஜக - அதிமுக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
கிட்டத்தட்ட இந்த பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டிவிட்ட சூழலில், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலில் பாமக சார்பாக போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்கள் டிசம்பர் 14 முதல் டிசம்பர் 20 வரை விநியோகிக்கப்படும் என்று அன்புமணி அறிவித்துள்ளார்.
பூர்த்தி செய்த இந்த விண்ணப்பங்களை பனையூரில் உள்ள பாமக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார். புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் பாமக போட்டியிட திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக தரப்பில் டிசம்பர் 15ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications