டெல்லியில் 100 பேர் கூட இல்லாமல் பிசுபிசுத்து போன பாமக ஆர்ப்பாட்டம்! ராமதாஸ் ஷாக்! அன்புமணி ராக்ஸ்!
சென்னை: டெல்லியில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து பாமக நேற்று நடத்திய போராட்டத்தில் 100 பேர் கூட இல்லாமல் அந்த போராட்டம் பிசுபிசுத்து போனது கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாமகவில் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே கட்சி யாருக்கு என்ற உரிமை போராட்டம் நடந்து வருகிறது. இதற்காக கட்சி நிர்வாகிகளை ஒருவர் நியமிப்பதும் இன்னொருவர் நீக்குவதுமாக இருந்தனர்.
அது போல் கட்சியை கைப்பற்ற இரு தரப்பினரும் பொதுக் குழு கூட்டங்களை நடத்தி சில தீர்மானங்களை நடத்தியிருந்தனர். இதனிடையே அன்புமணி தலைமையிலான பாமகவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
ஆகஸ்ட் வரை தலைவர்
அத்துடன் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை கட்சியின் தலைவராக அன்புமணி தொடர்வார். பாமக சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஏ, பி படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் அவருக்குத்தான் உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேர்தல் ஆணையம்
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதி மினி புஷ்கர்னா நேற்று விசாரித்தார்.
ராமதாஸ் தரப்பு வாதம்
அப்போது ராமதாஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் பல்வீர் சிங் ஆஜராகி, "அங்கீகாரமற்ற அரசியல் கட்சியின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தேவையில்லாமல் தலையிட்டுள்ளது. கட்சியின் முன்னாள் தலைவர் அன்புமணியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை உள்ளது என தெரிவித்துள்ளது.
அன்புமணி
ஆனால் அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே மாதமே முடிந்துவிட்டது. ஆனால் கடந்த 2023 ஆம் ஆண்டு பொதுக் குழு நடத்தப்பட்டதாக போலியான ஆவணங்களை அளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து ராமதாஸ், தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதங்களை கண்டு கொள்ளவே இல்லை. எனவே தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு கடிதங்களை ரத்து செய்ய வேண்டும்" என்றார்.
அன்புமணி தரப்பு வாதம்
இதையடுத்து அன்புமணி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு, "முறையாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவிக்காலம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை உள்ளது. பாமக நிறுவனருக்கு வயது மூப்பு ஏற்பட்டுள்ளதால் கட்சியை வழிநடத்த அடுத்த கட்டமாக மகன் பொறுப்பேற்றுள்ளார். எனவே ராமதாஸின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என வாதம் முன் வைக்கப்பட்டது.
பாமக போராட்டம்
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "இந்த வழக்கில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது, சிவில் வழக்கு தாக்கல் செய்ய முடியும்" என கூறி ராமதாஸின் மனுவை முடித்து வைத்தார். இப்படி நீதிமன்றத்திற்கு வழக்கு சென்றுள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து நேற்று பாமக சார்பில் போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்டது.
ஜந்தர் மந்தரில் போராட்டம்
அதன்படி காலை 11 மணிக்கு டெல்லி ஜந்தர் மந்தரில் அன்புமணி, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் எம்.எல்.ஏ அருள் உள்பட ராமதாஸ் தரப்பினரை சேர்ந்த பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
100 பேர் கூட இல்லை
அவர்கள் தேர்தல் ஆணையத்துக்கு எதிராகவும், அன்புமணிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த போரட்டத்தில் அன்புமணிக்கு எதிராக ஆயிரக்கணக்கில் ராமதாஸ் ஆதரவாளர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 100 பேர் கூட கூடாதது ராமதாஸ் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 1000 பேரை கூட கூட்ட முடியவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் சென்னையில் டிசம்பர் 2 ஆம் தேதி நடக்கவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டதால் அதிலாவது ராமதாஸுக்கு பெரிய அளவிலான ஆதரவு இருக்கிறதா என்பதை பார்க்கலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications