Exclusive: எடப்பாடி பழனிசாமி எடுத்த கடைசி அஸ்திரம்.. யார் அந்த "வி.வி.ஐ.பி".. கதிகலங்கும் தைலாபுரம்

பாமக நிர்வாகிகளுக்கு அதிமுக வலைவீசி வருவதாக கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவுடன் ஒருபக்கம் மோதி வந்தாலும், அதிமுகவை பலப்படுத்தும் அனைத்து வேலைகளிலும் எடப்பாடி பழனிசாமி இறங்கிவிட்டாராம்.. இது தான் கூட்டணி கட்சிகளுக்கு பெருத்த கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.. அதிலும் பாமக இந்த விஷயத்தில் நொந்து போயுள்ளதாம்..!

அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகி விட்ட நிலையில், "இனி வரும் தேர்தல்களில் பா.ம.க. தனித்தே போட்டியிடும். அன்புமணியை முதலமைச்சராக்குவதே எங்களின் நோக்கம்"என்பதை தொடர்ச்சியாக சொல்லி வருகிறார் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

அதிமுக கூட்டணியில் பாமக இல்லையென்பதால் பாமக தலைமையால் கடந்த காலங்களில் நீக்கப்பட்டவர்கள், பாமகவின் தலைமையோடு முரண்பட்டு அக்கட்சியிலிருந்து தாங்களாகவே விலகியவர்கள் ஆகியோர்கள் குறித்த விவரங்களை எடுத்து வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி...

 லிஸ்ட்

லிஸ்ட்

குறிப்பாக, வட தமிழகத்தில் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது... அந்த பட்டியலில் இடம் பெறுபவர்களில் மக்களிடம் செல்வாக்குள்ள அல்லது மக்களுக்கு அறியப்பட்டவர்களை மட்டும் தனியாக பிரித்து, முதல்கட்டமாக அவர்களை அதிமுகவுக்குள் கொண்டு வரும் அசைன்மெண்டும் போடப்பட்டுள்ளது... அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாமகவின் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜை சேலத்தில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்து நீண்ட நேரம் விவாதித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

 செல்வாக்கு

செல்வாக்கு

அந்த விவாதத்தில், "மக்களிடம் செல்வாக்குப்பெற்ற நீங்கள் அரசியலிலிருந்து விலகியிருப்பது சரியில்லை. அதனால் அதிமுகவுக்கு வாருங்கள். நீங்கள் போட்டியிட விரும்பும் தொகுதியை நாங்கள் தருகிறோம் " என்று சொல்லியிருக்கிறாராம் எடப்பாடி. ஆனால், இதனை ரவிராஜ் மறுக்கவும் இல்லை.. உடனடியாக ஏற்கவும் இல்லை... கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.. ஆலோசித்து விட்டுச் சொல்கிறேன் என்று மட்டும் தெரிவித்து விட்டு வந்திருக்கிறார் ரவிராஜ்.

சமாதானம்

சமாதானம்

இந்த நிலையில், எடப்பாடி - ரவிராஜ் சந்திப்பை அறிந்த பாமக தலைமை விசாரிக்கத் துவங்கியுள்ளது. பாமகவிலிருந்து விலகிய முக்கிய பிரமுகர்களை எடப்பாடி வளைக்கத் திட்டமிட்டுள்ளார் என்பதை அறிந்து பாமக தலைமை அப்-செட்டாகி விட்டதாம்.. இதனையடுத்து, அதிமுக பக்கம் ரவிராஜ் சென்று விடக்கூடாது என யோசித்து, ரவிராஜின் சம்மந்தி மூலமாக ரவிராஜை தடுக்க நினைத்திருக்கிறார் டாக்டர் அன்புமணி. மேலும், மீண்டும் பாமகவிற்குள் வரவேண்டும், டாக்டர் அய்யா உங்களை வரவேற்பதில் விருப்பமாக இருக்கிறார் என்று ரவிராஜுக்கு தூது அனுப்பியுள்ளார் அன்புமணி.

 பாமக திடீர் முடிவு

பாமக திடீர் முடிவு

இதற்கிடையே, எடப்பாடியின் திட்டத்தை முறியடிக்க , பாமகவின் முன்னாள் வி.வி.ஐ.பி.க்களை பாமகவுக்குள் மீண்டும் கொண்டு வர பாமகவில் பகீரத முயற்சிகள் ரகசியமாக எடுக்கப்பட்டு வருகிறது.. எதற்காக எடப்பாடி இப்படி ஒரு வியூகத்தை கையில் எடுக்கிறார் என்று தெரியவில்லை.. வடமாவட்டங்களில் பாமக இல்லாமல் அதிமுக வாக்குகளை பெறுவது என்பது கடினமான காரியம்.. அந்த வகையில், கூட்டணியில் இல்லாவிட்டாலும், பாமக சம்பந்தபட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இருந்தாலும் வாக்குகள் பலப்படும் என்று நம்புகிறாராம்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+