அன்புமணிக்கு புரோமோஷன்? மே 28-ஆம் தேதி பாமக சிறப்பு பொதுக்குழு! என்ன பின்னணி?
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வரும் 28-ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
இந்த பொதுக்குழுவில் அன்புமணி ராமதாசுக்கு கட்சிப் பதவியில் புரோமோஷன் வழங்குவது குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பாமக தலைவராக பொறுப்பேற்று வெள்ளிவிழா காணும் ஜி.கே.மணிக்கு பாராட்டுத் தீர்மானமும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக பாமக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது;

மே 28-ஆம் தேதி
பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் வரும் 28.05.2022-ஆம் நாள் சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு சென்னையை அடுத்த திருவேற்காடு ஜி.பி.என். பேலஸ் திருமண அரங்கத்தில் நடைபெறும். பாட்டாளி
மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் சிறப்பு
பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்கிறார்.

யார் யார் பங்கேற்பு?
பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பா.ம.க. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர்
நிர்வாகிகள், பாட்டாளி மக்கள் கட்சியின் பல்வேறு அணிகளின் அனைத்து நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள்.

பாமக பொதுக்குழு
சார்பு அமைப்புகளான வ.ச., ச.மு.ச. ஆகியவற்றின் மாநில நிர்வாகிகள், மாவட்டத்
தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளும்
இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பார்கள். இவ்வாறு அந்த அறிவிப்பில்குறிப்பிடப்பட்டுள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆண்டுக்கு ஒரு
முறை மட்டுமே பொதுக்குழுவை கூட்டும் நிலையில் பாமக ஆண்டுக்கு மூன்று
முறையாவது பொதுக்குழு கூட்டத்தை நடத்தி விடுகிறது.

அன்புமணி ராமதாஸ்
இந்த பொதுக்குழுவில் அன்புமணி ராமதாசுக்கு கட்சிப் பதவியில் புரோமோஷன்வழங்குவது குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும்
பாமக தலைவராக பொறுப்பேற்று வெள்ளிவிழா காணும் ஜி.கே.மணிக்கு பாராட்டுத்
தீர்மானமும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து அடுத்தடுத்து தவெகவில் இணைவது சரியில்லை.. மா.கம்யூனிஸ்ட் கோபம் -
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி












Click it and Unblock the Notifications