திமுக பக்கம் துண்டை போட்ட ராமதாஸ்.. முஷ்டி உயர்த்தும் விசிக! சமாதான புறாக்களோடு களமிறங்கிய புள்ளி!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் ராமதாஸ் தரப்பு எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கப் போகிறது என்பதுதான் தற்போதைய அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. அன்புமணி அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து விட்ட நிலையில், ராமதாஸ் திமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் விசிக அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் திமுகவின் முக்கிய அமைச்சர் ஒருவர் சமாதான தூது புறாக்களை பறக்கவிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 தேர்தலில் கூட்டணி தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்ற சூழல் உருவாகியுள்ள நிலையில், சிறு கட்சிகளை விட விட்டு விடக் கூடாது என திமுகவும், அதிமுகவும் நினைக்கின்றன. அந்த வகையில் தமிழக அரசியல் களத்தில் பாமகவை மையமாக வைத்து பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே நீண்ட காலமாக நீடித்து வரும் அதிகார மோதல், தற்போது வெளிப்படையான அரசியல் பிரிவாக மாறி உள்ளது. ஒரே கட்சிக்குள் தந்தையும் மகனும் தனித்தனி பாதையில் பயணிக்கும் நிலை உருவாகியுள்ளது.

பாமக உட்கட்சிப் பிளவு
இந்த தாக்கம் திமுக - அதிமுக கூட்டணி அரசியலிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. அண்மையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த டாக்டர் அன்புமணி, அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெறுவது உறுதியானதாக அறிவித்தார். இதன் மூலம் பாமக அதிகாரப்பூர்வமாக அதிமுக அணியில் இணைந்துவிட்டதாக அன்புமணி தரப்பு தெரிவிக்கிறது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா இடமும் வழங்கப்படலாம் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்த முடிவு, ராமதாஸ் தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ராமதாஸ் திமுக கூட்டணி
அன்புமணிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ராமதாஸ் தரப்பு திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுக கூட்டணியில் அன்புமணி இருப்பதால், அந்த அணிக்கு செல்லும் வாய்ப்பே இல்லை என்பதில் ராமதாஸ் தெளிவாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். பாமகவின் அடிநாதமாகக் கருதப்படும் வன்னியர் சங்கம் முழுவதும் தன் கட்டுப்பாட்டில்தான் இருப்பதாக ராமதாஸ் தொடர்ந்து சொல்லி வருகிறார்.
வன்னியர் அரசியல்
இந்த தேர்தலில், ராமதாஸ் யார் என்பதை மகன் அன்புமணிக்கு மக்கள் புரிய வைப்பார்கள் என்ற கருத்தையும் அவர் வெளிப்படையாக கூறி வருகிறார். இந்த சூழலில் பாமகவுக்குள் தற்போது நிலவும் மோதல் நிர்வாகிகள் மட்டுமல்லாது அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களிடமும் தெளிவாகத் தெரிகிறது. பாமகவின் ஐந்து எம்.எல்.ஏக்களில் ஜி.கே. மணி மற்றும் இரா. அருள் ஆகியோர் ராமதாஸுக்கு ஆதரவாக நிற்க, எஸ்.பி. வெங்கடேஸ்வரன், எஸ். சதாசிவம், சி. சிவகுமார் ஆகியோர் அன்புமணிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். இந்த நிலையில், ஒருவருக்கொருவர் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதால், பாமக போர்க்களமாக மாறியுள்ளது.
மாம்பழம் சின்னம்
இந்தச் சூழலுக்கு மேலும் தீவிரம் சேர்த்தது தேர்தல் ஆணையத்தின் அண்மைய அறிவிப்பு. 2026 ஆகஸ்ட் மாதம் வரை பாமக தலைவராக அன்புமணியே தொடர்வார் என்றும், கட்சியின் மாம்பழம் சின்னமும் அன்புமணி தரப்புக்கே ஒதுக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை ராமதாஸ் கடுமையாக எதிர்த்து, அன்புமணி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திலும் காவல் துறையிலும் புகார் அளித்துள்ளார்.
திமுக கூட்டணி கணக்கு
இதற்கிடையே, ராமதாஸ் தரப்பில் இருந்து தேர்தல் குறித்த பேச்சுகளும் தீவிரமடைந்துள்ளன. ராமதாஸ் மகளும், கட்சியின் செயல் தலைவருமான ஸ்ரீகாந்தி, ஜி.கே. மணி, இரா. அருள், திருக்கச்சூர் ஆறுமுகம் உள்ளிட்டோர் அடுத்த தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாமகவின் ராமதாஸ் பொதுக்குழுவில் 2026ல் கூட்டணிக்கு திமுகவா அல்லது தவெகா என்ற கேள்வியை கட்சி நிர்வாகிகளிடம் எழுப்பிய போது, பெரும்பாலானோர் திமுக கூட்டணியில் சென்றால் வெற்றி வாய்ப்பு அதிகம் என தெரிவித்ததாகவும் ராமதாஸ் தரப்பு கூறுகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி
இந்த நிலையில், ராமதாஸ் திமுக கூட்டணியில் இணைந்தால், அந்த கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் விசிக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், ராமதாஸை திமுக அணியில் இணைத்துக் கொள்ளவும், அதே நேரத்தில் விசிகவை கூட்டணியில் தக்கவைத்துக் கொள்ளவும் வடமாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர் தீவிரமாக சமாதான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால், ராமதாஸ் தரப்பு 10க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்பதால், திமுக - பாமக பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
-
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications