'வன்னியர் சங்கம்' ஸ்டாலினை கொல்ல சிறையில் இருந்து ஸ்கெட்ச்- பா.ம.க மாநில நிர்வாகி வெங்கட்ராமன் கைது
சென்னை: வன்னியர் சங்கத்தின் துணைத் தலைவர் ம.க. ஸ்டாலினை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக பாட்டாளி மக்கள் கட்சி ( பா.ம.க.) மாநில துணைப் பொதுச்செயலாளர் கே.ஆர். வெங்கட்ராமன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
வன்னிர் சங்க மாநில துணைத் தலைவரான ம.க.ஸ்டாலின், கும்பகோணம் அருகே திருவிடைமருதூரைச் சேர்ந்தவர். சில நாட்களுக்கு முன்னர் ஸ்டாலினை கொல்ல ஒரு ரவுடி கும்பல் முயற்சித்தது.

சிக்கிய ரவுடிகள்
இது தொடர்பாக போலீசில் ஸ்டாலின் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் லாலி மணிகண்டன் என்ற ரவுடி தலைமையிலான கும்பலை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

பாமக மாநில து.பொ. வெங்கட்ராமன்
இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பா.ம.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் கே.ஆர். வெங்கட்ராமனுக்காக தாங்கள் ம.க.ஸ்டாலினை கொல்ல முயன்றதாக லாலி மணிகண்டன் கோஷ்டி போலீசில் தெரிவித்தது.

சிறையில் இருந்து ஸ்கெட்ச்
ஒரே கட்சியாக இருந்த போதும் முன்விரோதம் காரணமாகவே ம.க.ஸ்டாலினை காலி செய்ய வெங்கட்ராமன் திட்டம் போட்டிருந்ததும் அம்பலமானது. சென்னை புழல் மத்திய சிறையில்தான் ம.க.ஸ்டாலினை போட்டு தள்ள ஸ்கெட்ச் போடப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

வெங்கட்ராமன் கைது
இதனையடுத்து கே.ஆர்.வெங்கட்ராமன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் இன்று கே.ஆர். வெங்கட்ராமனை ம.க.ஸ்டாலின் கொலை முயற்சி வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

வெங்கட்ராமன் சிறையிலடைப்பு
பின்னர் திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் வெங்கட்ராமன் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி வெங்கட்ராமனை போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த கொலைச் சதியில் வேறு யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது தொடர்பாகவும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
-
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications