"மினிஸ்டர்" அன்புமணி.. பாமக போட்ட போடு.. கண்டிஷனுக்கு ஓகே சொன்ன பாஜக.. பழுக்குது மாம்பழம்!
சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு பாமக முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளதாம்.
கடந்த ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு முன்பாக அதிமுக - பாமக கூட்டணி முறிந்தது. அதன்பின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் இவர்கள் ஒன்றாக நிற்கவில்லை. சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட.. நாங்கள் அதிமுகவின் கூட்டணியில் இல்லை. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று கூறினார் ராமதாஸ்.

அதிமுகவுடன் இணையும் எண்ணத்தில் பாமக இல்லை. உடைந்த அதிமுகவில் இணைந்தால் பயன் இல்லை என்று நினைக்கிறார். எடப்பாடியும் இன்னும் தான்தான் ஒட்டுமொத்த அதிமுக என்பதை நிரூபிக்கவில்லை. தொண்டர்கள் எல்லோரும் தன் பக்கம் இருக்கிறார்கள். தேர்தலில் நின்றால் வெற்றிபெறுவேன் என்பதை எடப்பாடி நிரூபிக்கவில்லை. இதனால் பாமக இவர்களுடன் கூட்டணி வைக்குமா என்ற கேள்வி உள்ளது என்று ராமதாஸ் காட்டாமாக கூறி இருந்தார்.
திராவிட கட்சிகள் இல்லை: சமீபத்தில் பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி அதிமுக இப்போது 5 பாகங்களாக உடைந்துவிட்டது. பலரும் இங்கே சத்தம்தான் போட்டு வருகிறார்கள். பாமகதான் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறது. பாமக ஒரு அறிக்கை விட்டால் போதும் முதல்வர் ஸ்டாலின் அதை நிறைவேற்றி விடுகிறார் என்று வெளிப்படையாக திமுகவிற்கு ஆதரவாக கூறினார். இதனால் திமுகவோடு பாமக கூட்டணி வைக்கிறதோ என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதில் சொன்ன அன்புமணி, திமுகவோடு கூட்டணி இல்லை. அதிமுகவுடனும் கூட்டணி இல்லை. நாங்கள் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம், என்று கூறினார்.
பாஜக கூட்டணி: இந்த நிலையில்தான் பாஜக மூன்றாவது அணியை லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பாஜக + ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் + பாரி வேந்தரின் ஐஜேகே + மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து மூன்றாவது கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டணியில் பாமக, தேமுதிக சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான திரைமறைவு பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
பாமக கோரிக்கை: இந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் பாமக முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளதாம். அதன்படி லோக்சபா தேர்தலில் அன்புமணிக்கு தர்மபுரி தொகுதியை மீண்டும் கொடுக்க வேண்டும். அங்கே திமுக தற்போது வலிமை இழந்துவிட்டது.
அன்புமணி அங்கே வெற்றிபெறும் பட்சத்தில் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும். மொத்தமனாக 10 இடங்களில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் இடங்களை குறைத்துக்கொண்டு.. அன்புமணிக்கு "மீண்டும்" ராஜ்ய சபை செல்ல வாய்ப்பு + அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று பாமக கோரிக்கை வைத்துள்ளதாம்.
பாஜக ரியாக்சன்: அமைச்சர் பதவிக்கு பாஜக ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. பாஜக தேசிய அளவில் தனிப்பெரும்பான்மை பெரும் என்ற நம்பிக்கையில் உள்ளது. அப்படி இருக்க.. கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டிய அவசியமே கிடையாது. எனவே அமைச்சர் பதவியை பின்னர் பார்க்கலாம்.
அன்புமணிக்கு மீண்டும் ராஜ்ய சபா பதவி.. இந்த முறை.. பாஜக சார்பாக வழங்குவதற்கு வேண்டுமானால் ரெடியாக இருக்கிறோம் என்று பாஜக கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதாம். வெறும் ராஜ்ய சபா பதவிதான் என்றால்.. அதை அதிமுகவே கொடுக்கும் என்று அதிமுக பக்கமும் போகஸை திருப்ப பாமக அடிபோட்டு வருகிறதாம்.












Click it and Unblock the Notifications