எந்த கட்சியுடன் பாமக கூட்டணி.. சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில் எடுத்த முடிவு என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி முக்கியமான முடிவினை அறிவித்துள்ளது.

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 10 ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பில் இருக்கிறது. ஏப்ரல் அல்லது ம மாதத்தில் தேர்தல் வந்துவிடும். தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியில் பாஜக கூட்டணி வலுவாக உள்ளது. அதேநேரம் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி தனியாக போட்டியிட போகிறது. திரிணாமுல் காங்கிரஸ் தனியாக போட்டியிட போகிறது. கேரளாவில் கம்யூனிஸ்டுகள் தனித்து போட்டியிட போகிறார்கள். நிதிஷ் குமார் பாஜக பக்கம் தாவிவிட்டார். உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதியும், தமிழ்நாட்டில் திமுகவும், மகாராஷ்டிராவில் என்சிபியும் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இப்போது உள்ள வலிமையான கூட்டணி கட்சிகள் ஆகும்..

PMK today decide with whom to ally in the Lok Sabha election 2024

மத்தியில் இப்படி என்றால் தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவே கூட்டணியில் சேராமல் உள்ளது.. அதிமுக பாஜக உடன் கூட்டணியை முறித்து கொண்டுள்ளது. திமுக காங்கிரஸ் தனி அணியாகவும், அதிமுக தனி அணியாகவும் உள்ளது. பாஜக தனி அணியாகவும் உள்ளது. இதில் கூட்டணியில் சேராத கட்சிகள் என்றால் பாமக மற்றும் தேமுதிக மட்டுமே. தேமுதிக இந்த முறை பாஜக கூட்டணிக்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் அதிமுகவும் தேமுதிகவை கூட்டணியில் இழுக்க முயற்சித்தி வருகிறது. இதுஒருபுறம் எனில் ராமதாஸ் தலைமையிலான பாமக மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. வட மாவட்டங்களில் கணிசமான வாக்குவங்கி கொண்ட பாமக கடந்த 2019 சட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுகவிற்கு பக்கபலமாக இருந்தது. இதன் காரணமாக அதிமுக பாமகவை கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வருகிறது. அதேநேரம் திமுக கூட்டணியிலும் சேர பாமக ஆயத்தமாகி வருவதாக செய்திகள் கசிந்தது.. இதுஒருபுறம் எனில் பாஜகவும் பாமகவை தன் பக்கம் இழுக்க முயற்சித்து வருகிறது. இந்த சூழலில் பாமக யாருடன் கூட்டணி என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த சூழலில் சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை அரங்கில் இன்று பாமக சிறப்பு பொதுக்குழு கூடியது.. இந்த கூட்டத்தில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து 2024 மக்களவைத் தேர்தலில் மாநில நலனிலும், தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் தீர்மானிக்கிறது. எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் நிறுவனர் ராமதாஸ்க்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ராமதாஸ் தான் யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்க உள்ளார்.

தற்போது திமுக - காங்கிரஸுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை முடித்து, கம்யூனிஸ் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடனும் பேச்சு நடத்த ஆயத்தமாகி வருகிறது. திமுகவை போல் அதிமுகவும் தொகுதி பங்கீட்டு குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களை அமைத்து தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. ஓபிஎஸ் அணி, டிடிவி தினகரன்,சசிகலா ஆகியோர் பாஜகவிற்கு ஆதரவு தெரிவிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஏனெனில் எடப்பாடியுடன் சேர்ந்து பயணிக்க வாய்ப்பு இல்லை என டிடிவி அண்மையில் கூறியிருந்தார்.. இதனால் தேர்தல் களம் எப்படி இருக்கும் என்பது ஓரளவு உறுதியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+