அடுத்தது நானா! பல்கலை. மாணவி வன்கொடுமையை கண்டித்து பாமக ஆர்ப்பாட்டம்! சவுமியா அன்புமணி கைது
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்காரத்தை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் பசுமைத் தாயகம் தலைவி சவுமியா தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்டார். அவருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மகளிரணியினரும் கைது செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்குள்படுத்தப்பட்டார். அவரது புகாரின் பேரில் ஞானசேகரன் என்ற 38 வயது நபர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

23 ஆம் தேதி இரவு தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்ததை மறைந்திருந்து வீடியோவாக எடுத்த அந்த நபர், தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் டீனிடம் சொல்லி டிசி வாங்கிக் கொடுத்து விடுவதாக மிரட்டிய அந்த நபர், வீடியோவை மாணவியின் தந்தைக்கும் அனுப்புவதாக தெரிவித்தாராம்.
இந்த நிலையில் ஆளுநரின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பிரதான கல்லூரியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும் அந்த ஞானசேகரன், மாணவியை மிரட்டும் போது யாரோ ஒருவரிடம் போனில் பேசியதாக அந்த மாணவி வாக்குமூலம் அளித்தாராம்.
அந்த மாணவி யாரோ ஒரு சாருடன் இரவு தங்க வேண்டும் என்றும் அந்த நபர் மிரட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முன்னாள் ஆளுநர் தமிழிசை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அது போல் கோவையில் தனது வீட்டில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தன்னை சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டமும் நடந்தன. மேலும் தமிழக எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடந்தது. தமிழகம் முழுவதும் யார் அந்த சார் என கேட்டு அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
அது போல் தவெக கட்சித் தலைவர் விஜய்யும் தனது பங்கிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தார். அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக விஜய் தம் கைப்பட எழுதிய கடிதத்தை விநியோகித்தனர்.
இந்த நிலையில் பாமகவின் மகளிர் அணி சார்பில் இன்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் அடுத்தது நானா, Am I Next என கேட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போராட்டம் பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி தலைமையில் நடக்கிறது.
இந்த போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சென்னையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதால் வள்ளுவர் கோட்டத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் பாமக மகளிர் அணியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சவுமியா அன்புமணி தலைமை வகித்தார். இதையடுத்து அங்கு குவிந்திருந்த போலீஸார் சவுமியா அன்புமணி உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆர்ப்பாட்டத்தை கைவிடச் சொன்னார்கள். ஆனால் அவர்கள் கைவிட மறுத்தனர். இதையடுத்து சவுமியா உள்ளிட்ட பாமக மகளிரணியினர் கைது செய்யப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டு பாமக, உயர்நீதிமன்றத்தை நாடியது.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications