அதிமுகவுடன் கூட்டணியால் பாமகவில் பிளவு.. இளைஞர் சங்க செயலாளர் ராஜினாமா
-கோயா
சென்னை: அதிமுக மற்றும் பாஜகவுடன் இணைந்து பாமக கூட்டணி அமைத்திருப்பதால் அக்கட்சியில் பிளவு வெடித்துள்ளது.
அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. நேற்று அதிமுக தலைவர்களைச் சந்தித்துப் பேசி கூட்டணியில் இணைந்தது பாமக. அக்கட்சிக்கு 7 லோக்சபா சீட்டுகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் தரப்பட்டுள்ளது.

பாமக கடந்த தேர்தலை விட இப்போது பலம் வாய்ந்ததாக மாறியிருப்பதாக கருதப்படுவதால் பாமக, அதிமுக அணியில் இணைந்திருப்பது மற்ற கட்சிகளை அதிர வைத்துள்ளது. இதனால் பாமகஇதவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பாமகவுக்குள்ளேயே எதிர்ப்புக் குரல் கேட்க ஆரம்பித்துள்ளது. மாநில பாமக இளைஞர் அணி செயலாளர் ராஜேஸ்வரி பிரியா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பாமக மாநில இளைஞர் சங்க செயலாளராக கடந்த மார்ச் 8, 2017 முதல் பதவி வகித்து வருகிறேன். பாமக அமைத்துள்ள கூட்டணி குறித்து மனம் ஒவ்வாமல் அதிலிருந்து விலகுகிறேன். எனது விலகல் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கவுள்ளேன் என்று கூறியுள்ளார்.
ராஜேஸ்வரி பிரியாவைப் போல மேலும் சில முக்கிய பாமக பிரமுகர்களும் அதிருப்தியில் உள்ளதாகவும், அவர்களும் கட்சியை விட்டு விலகலாம் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications