ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கும்.. சிலிண்டர் சின்னம் ஒதுக்கீடு!
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்.23ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் (ராமதாஸ் தரப்பு) 30 வேட்பாளர்களுக்கும் சிலிண்டர் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதாக, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருக்கிறார்.
எனவே தங்கள் கட்சியின் சார்பில் களம் காணும் 30 வேட்பாளர்களுக்கும் சிலிண்டர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இந்த தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி (ராமதாஸ் தரப்பு), சசிகலாவின் அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்துடன் இணைந்து களம் காண்கிறது. அன்புமணி ராமதாஸ் உடனான மோதலுக்கு பின்னர், பாமக இரண்டு பிரிவாக உடைந்திருக்கிறது. அன்புமணி தலைமையிலான பாமக தற்போது அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றிருக்கிறது. இக்கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
பாட்டாளி மக்கள் கட்சி, அதன் தேர்தல் வரலாற்றில் 20 தொகுதிகளுக்கும் குறைவான தொகுதிகளில் போட்டியிடுவது இதுவே முதல்முறையாகும். இப்படி இருக்கையில், தருமபுரி, பென்னகரம் உள்ளிட்ட 30 தொகுதிகளில் களமிறங்கயிருக்கும் ராமதாஸ் தலைமையிலான பாமகவுக்கு சிலிண்டர் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், "பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ச.இராமதாசு ஆகிய எனது ஆதரவு பெற்று மேற்கண்ட சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் மேற்கண்ட வேட்பாளர்களுக்கு வருகின்ற 2026 தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்வதற்கு 23.04.2026 அன்று நடைபெற உள்ள தேர்தலில் மேலே உள்ள 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications