சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதுவரை 4தான் ரெடியாயியிருக்காம்.. மிச்சம் 3 தொகுதிக்காக அல்லாடும் பாமக!

பாமகவுக்கு 7 தொகுதிகளில் 4 கன்பார்ம் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: 7 சீட்டுகள் என்று பாமகவுக்கு உறுதிப்படுத்தப்பட்டும் அவை இன்னென்ன தொகுதிகள்தான் என்று முடிவு செய்வதில் சிக்கல் எழுந்துள்ளதாம்.

நேற்று பியூஷ்கோயல் அதிமுக தலைமை அலுவலகம் வரவும், தொகுதிகள்தான் அறிவிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. ஆனால் இன்னும் யாருக்கு என்ன தொகுதிகள் ஒதுக்குவது என்பதிலேயே சிக்கல் எழுந்துள்ளதாம்!

திமுக எப்படி காங்கிரசுக்கு 10 சீட் எடுத்த எடுப்பிலேயே தந்ததோ அதுபோலவே அதிமுகவும் பாமகவுக்கு 7+1 என்று ஒதுக்கி எல்லாரையும் ஆச்சரியப்படுத்தியது.

மத்திய சென்னையில் கமீலா நாசர்?.. நேர்காணலே முடியலையே.. அதுக்குள்ள போஸ்டர் ரெடியாய்ருச்சே!!மத்திய சென்னையில் கமீலா நாசர்?.. நேர்காணலே முடியலையே.. அதுக்குள்ள போஸ்டர் ரெடியாய்ருச்சே!!

அன்புமணி

அன்புமணி

இதில் சில தினங்களுக்கு முன்பு பாமக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் இவர்கள்தான் என்று ஒரு உத்தேச பட்டியலும் வெளியானது. அதில் அன்புமணி ராமதாஸ் பெயர் இடம் பெறவில்லை. இதற்கு ஒருவேளை, எம்பி தேர்தலில் இல்லாமல் அவர் ராஜ்யசபாவில் போட்டியிடலாம் என்றும் ஒரு கருத்து உலா வந்தது.

விரைவில் 3

இதனிடையே பாமகவுக்கு இப்போதைக்கு 4 தொகுதிகள்தான் கன்பார்ம் ஆகி உள்ளதாம். மீதி 3 தொகுதிகள் கூடிய சீக்கிரம் ஒதுக்க உள்ளதாக தெரிகிறது.

ராஜ்ய சபா

ராஜ்ய சபா

கடலூர், தருமபுரி, அரக்கோணம், விழுப்புரம், ஆகிய 4 தொகுதிகள்தான் உறுதியாகி உள்ளதாம். மீதமுள்ள மூன்று தொகுதிகள் விரைவில் ஒதுக்கப்படும் என தெரிகிறது. ஒதுக்கப்பட்ட இந்த நான்கு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிட்டால் அன்புமணிக்கு ராஜ்ய சபா சீட் என்று பாஜக பிராமிஸ் செய்திருக்கிறதாம்.

[ ஒட்டு மொத்த நாடும் ஒற்றை விரலுடன்.. லோக்சபா தேர்தல் 2019 ]

தருமபுரி

தருமபுரி

மற்ற 3 தொகுதிகளில் எப்படியும் ஆரணி கண்டிப்பாக இருக்கும் என்று தெரிகிறது. ஆரணியை ஆரம்பத்திலிருந்தே வேண்டும் என்று கேட்டு கொண்டிருந்தவர் அன்புமணிதான். ஒருவேளை ராஜ்யசபாவுக்கு அன்புமணி போட்டியிடவில்லையென்றால் அவரது முதல் சாய்ஸ் தருமபுரியைவிட ஆரணியாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

களப்பணி

களப்பணி

எப்படியோ, இப்போதைக்கு 4 தொகுதிகள் கன்பார்ம் என்பதாலும், அதை வைத்து அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் என்ற பேச்சு எழுந்துள்ளதாலும் தொண்டர்கள் களப்பணியில் ஜரூராக இறங்கி விட்டனர்.

English summary
4 Constitutions have been confirmed in 7 constituencies for PMK. It seems that the remaining 3 Constitution will be announced shortly
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X