சிலிண்டருக்கு குட்பாய்.. குழாய் மூலம் காஸ் இணைப்பு சென்னையில் யாரெல்லாம் பெற முடியும்?
சென்னை: சிலிண்டர் தட்டுப்பாடு கடுமையாக இருக்கிறது.. சென்னையில் பல வீடுகளுக்கு சிலிண்டர் சரியாக கிடைப்பது இல்லை.. சிலிண்டர் இல்லாத நிலையில், பலர் விறகு அடுப்புக்கும், மின்சார அடுப்புக்கும் மாறுகிறார்கள்.. இந்நிலையில் சென்னையில் மட்டும் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு பெறும் வசதி உள்ளது. குழாய் மூலம் எரிவாயு இணைப்பு சென்னையில் யாரெல்லாம் பெற முடியும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் காரணமாக சிலிண்டருக்கு பெரிய அளவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க வேண்டும் என்றால், அரபு கடல் பகுதிகளில் இந்தியாவின் 22 கப்பல்கள் இந்தியாவிற்கு வர வேண்டும். அப்படி வந்தால் தான் ஓரளவு நிலைமை சரியாகும். பொதுவாக கட்டுப்பாட்டான காலங்களில் தேவையை இரண்டு மடங்கு பயன்பாடு அதிகமாக இருக்கும்.. ஏஎம்களில் நாளை முதல் பணம் இருக்காது என்று அறிவித்தால், மொத்தமாக பணத்த அள்ளி செல்வார்கள்.

தேவையைவிட மக்கள் பீதியில் அள்ளி செல்வார்கள். அதுதான் நடக்கும்.. அப்படித்தான் இப்போது சிலிண்டர் தட்டுப்பாடு சமயத்திலும் நடக்கிறது. அதாவது தேவையை விட அதிகப்படியான சிலிண்டர் மக்கள் வாங்குவார்கள். பதுக்கல் சந்தையை ஒழிக்க அரசு இயல்பு நிலைக்கு கொண்டுவர வேண்டும்.. அப்போது தான் பிரச்சனை சரியாகும். அதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்பது சரியாக தெரியவில்லை.. இந்த சூழலில் சென்னையில் மட்டும் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு பெறும் வசதி உள்ளது. குழாய் மூலம் எரிவாயு இணைப்பு சென்னையில் யாரெல்லாம் பெற முடியும் என்பதை பார்க்க முடியும்.
சென்னையில் குழாய் மூலம் எரிவாயு (PNG - Piped Natural Gas) வழங்கும் திட்டத்தை அதானி கேஸ் மற்றும் டொரண்ட் கேஸ் போன்ற நிறுவனங்கள் இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு வாரியத்தின் அனுமதியுடன் செயல்படுத்தி வருகின்றன. சென்னையில் யாரெல்லாம் இந்த இணைப்பைப் பெற முடியும் என்பதற்கான தகுதிகள் மற்றும் விவரங்களை பார்ப்போம்.
சென்னையில் அனைத்து இடங்களுக்கும் இன்னும் குழாய்கள் பதிக்கப்படவில்லை. தற்போது முதற்கட்டமாக பின்வரும் பகுதிகளில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.. வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் மணலி, மாதவரம், பெரம்பூர், ராயபுரம், திருவொற்றியூர் போன்ற பகுதிகளில் விண்ணப்பிக்கலாம். தென் சென்னையில் ஓ.எம்.ஆர், ஈ.சி.ஆர், சோழிங்கநல்லூர், சிறுசேரி மற்றும் தாம்பரம் சுற்றியுள்ள சில பகுதிகளில் ஒப்படைக்கலாம்.
மேற்கு சென்னையில் ஆம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி போன்ற பகுதிகளில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. உங்கள் வீட்டின் தெருவில் மஞ்சள் நிறத்தில் 'PNG' என்று எழுதப்பட்ட குழாய்கள் பதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் உடனடியாக விண்ணப்பிக்க தகுதியானவர் என்று அர்த்தம்.
யார் விண்ணப்பிக்கலாம்
சொந்த வீடு வைத்திருப்பவர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம். அடுக்குமாடி குடியிருப்புகளை பொறுத்தவரை குடியிருப்போர் நலச் சங்கம் மூலம் மொத்தமாக விண்ணப்பித்தால் முன்னுரிமை அளிக்கப்படும். வாடகைக்கு இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம், ஆனால் வீட்டின் உரிமையாளரிடம் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டியது அவசியம் ஆகும்.
விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்
ஆதார் கார்டு, பான் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை என ஏதாவது ஒன்று, முகவரிச் சான்றை பொறுத்தவரை மின்சாரக் கட்டண ரசீது , சொத்து வரி ரசீது அல்லது குடும்ப அட்டை அல்லது வீட்டின் பத்திரம் அல்லது வீட்டு வாடகை ஒப்பந்தத்துடன் வீட்டு உரிமையாளரிடம் தடையின்மை சான்றிதழ்
கட்டண விவரங்கள்
பதிவு கட்டணம் : சுமார் ரூ.300 முதல் ரூ.500 வரை (நிறுவனத்தைப் பொறுத்து மாறும்). வைப்புத் தொகை சுமார் ரூ.5,000 முதல் ரூ.6,000 வரை வசூலிக்கப்படும். சில நேரங்களில் தவணை முறையிலும் செலுத்த வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
எப்படி விண்ணப்பிப்பது?
இணையதளம் வழியாக: அதானி கேஸ் அல்லது டொரண்ட் கேஸ் இணையதளத்திற்குச் சென்று 'New Connection' பகுதியில் உங்கள் ஏரியா பின் கோடை (Pincode) உள்ளிட்டு விண்ணப்பிக்கலாம். அதேபோல் உங்கள் பகுதிக்கு வரும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனைப் பிரதிநிதிகள் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கலாம்.
என்ன நன்மை
குழாய் எரிவாயு இணைப்பு பெற்றால், சிலிண்டர் தீர்ந்துவிடுமோ என்ற கவலை இல்லை. நீங்கள் பயன்படுத்தும் அளவிற்கு மட்டும் மாதம் ஒருமுறை பில் செலுத்தினால் போதும். மேலும், இது சிலிண்டரை விடப் பாதுகாப்பானது மற்றும் சுமார் 15% முதல் 20% வரை விலை குறைவாகவே இருக்கும்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications