சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா தடுப்பு பணி: முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5லட்சம் வழங்கினார் கவிஞர் வைரமுத்து!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு கவிஞர் ரூ5 லட்சம் வழங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ5 லட்சம் வழங்கினார் வைரமுத்து.

தமிழகத்தில் கொரோனா பரவல் மிக உக்கிரமாக உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறார்.

Poet Vairamuthu donates Rs 5 lakh to TN CMs Relief Fund for Corona fight

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு உலகத் தமிழர்கள் உதவ வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வேண்டுகோளை ஏற்று சாமானியர் முதல் தொழிலதிபர்கள் வரை நிதி உதவியை வழங்கி வருகின்றனர்.

தங்க மனம் வாழ்க...கொரோனா நிதி கொடுத்த காவலாளியை நேரில் அழைத்து பாராட்டிய ஸ்டாலின் தங்க மனம் வாழ்க...கொரோனா நிதி கொடுத்த காவலாளியை நேரில் அழைத்து பாராட்டிய ஸ்டாலின்

கவிஞர் வைரமுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்காக ரூ5 லட்சம் வழங்கினார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்து பதிவிட்டுள்ளதாவது:

முதலமைச்சர்
மு.க.ஸ்டாலினைச் சந்தித்து
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு
ரூபாய் 5லட்சம் வழங்கினேன்.

மனம்விட்டு உரையாடினோம்.
முதலமைச்சர் பண்பாட்டில் பழுத்திருக்கிறார்;
நல்லாட்சி குறித்தே கனவு காண்கிறார்;
செயல் குறித்தே திட்டமிடுகிறார்;
நாடுகாக்கத் துடிக்கும்
நல்லவரை வாழ்த்தினேன்.

இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

English summary
Poet Vairamuthu has donated Rs 5 lakh to TN CM's Relief Fund for Corona fight.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X