பொருளாதாரம், கலை, கலாசாரத்துக்கு தெலுங்கினத்தார் தீராத பங்களிப்பு.. வைரமுத்துவின் யுகாதி வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: நாட்டின் பொருளாதாரம், கலை மற்றும் கலாசாரத்துக்கு தெலுங்கினத்தார் தீராத பங்களிப்பு செய்து கொண்டிருக்கின்றனர் என தம்முடைய யுகாதி வாழ்த்து செய்தியில் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டான யுகாதி பண்டிகை இன்று வெகு உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தலைவர்கள் யுகாதி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
கவிஞர் வைரமுத்து தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட யுகாதி திருநாள் வாழ்த்து செய்தி:

நாட்டின் பொருளாதாரம்,
கலை, கலாசாரம் அனைத்திற்கும்
தீராத பங்களிப்புச் செய்தோர் -
செய்வோர் தெலுங்கினத்தார்.
அவர்கள்
யுகம் யுகமாய் மேலோங்கி வாழ
யுகாதி வாழ்த்துக்கள்.
#Yugadi
இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications