படத்துக்கு தாய் மொழியில் பெயர் வைத்தால் சந்தை மதிப்பு சரிந்துவிடாது.. வைரமுத்து வைக்கும் வேண்டுகோள்!
சென்னை: தமிழ் படங்களுக்கு தமிழில் தலைப்பு வைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் கவிஞர் வைரமுத்து. "தாய்மொழியில் பெயர் வைத்தால் சந்தை மதிப்பு சரிந்துவிடாது. மற்ற மொழிக்காரர்கள் தமிழ்ப்படங்களின் தலைப்புகளைத் தமிழிலேயே உச்சரிக்கட்டுமே!" எனத் தெரிவித்துள்ளார் வைரமுத்து.
நவம்பர் 20 முதல் 28 ஆம் தேதி வரை கோவாவில், 56ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா - இந்தியன் பனோரமா நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ஆநிரை தமிழ்க் குறும்படம் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டது.

இந்நிலையில், இயக்குநர் கணேஷ்பாபு, கவிஞர் வைரமுத்துவைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார். சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட்ட குறும்படத்துக்கு தமிழில் பெயர் வைத்ததற்காக இயக்குநரை பாராட்டியுள்ளார் கவிஞர் வைரமுத்து.
மேலும், அந்தந்த மொழிப்படங்களுக்குத் தாய்மொழியிலேயே
தலைப்பிடுவதே தகும். அவசியப் பட்டால் மட்டும் ஆங்கிலத்தில் பெயர் சூட்டலாம். ஆங்கிலப் படங்கள் எல்லாம் தமிழ்ப் பெயர்களோடு வெளிவரும்போது தமிழ்ப்படங்கள் ஆங்கிலப் பெயர்களோடு வெளிவருவது காலக் கூத்து எனத் தெரிவித்துள்ளார் வைரமுத்து.
வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில்,
கோவாவில் நிகழ்ந்த
இந்திய சர்வதேசத்
திரைப்பட விழாவில்
நம் தமிழ்த்தம்பி ஒருவன்
தகுதி பெற்றிருக்கிறான்
தம்பி கணேஷ்பாபு இயக்கிய
ஒரு குறும்படமும்
திரையீட்டுக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்டது
இல்லம் வந்தார்;
சான்றிதழைக் காட்டி
வாழ்த்துப் பெற்றார்.
படத்தின் ஒளிப்பதிவாளர்
நெல்லைத் தமிழன்
செல்லத்துரையும் உடன் வந்தார்
தம்பிமார்கள் இருவரையும்
தழுவி வாழ்த்தினேன்
கணேஷ்பாபுவை
நான் பெரிதும் பாராட்டியது
தகுதித்தேர்வுக்காக அல்ல;
தமிழில் அவர் வைத்த
தலைப்புக்காக
சங்க இலக்கியத்தின்
தெறித்த சொல்லெடுத்துத்
தனித்த தலைப்பாக இட்டிருக்கிறார்
'ஆநிரை'
படத் தலைப்பு சார்ந்து
என் கருத்து வருத்தம் இரண்டையும்
பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்
தமிழ்த் திரைப்படங்களின்
அண்மைத் தலைப்புகள்
கண்களைக் காயப்படுத்துகின்றன
ஒரு தலைப்பு என்பது
கதையின் மையத்தை நோக்கி
ரசிகனை அழைத்துச் செல்லவேண்டும்;
அவனையும் ஒரு
கதாசிரியன் ஆக்கவேண்டும்
தெரியாத சொல், தெளிவற்ற லிபி
ஆங்கில மொழி அல்லது
அந்நிய விளி என்று
தலைப்பு வைத்தால்தான்
இந்தியா முழுக்க வியாபாரம் ஆகும்
என்ற மூடக்கணக்கு நிலவுகிறது
அப்படித் தலைப்பு வைக்கப்பட்ட
படங்கள் எல்லாம்
அகண்ட பாரதத்தைத்
தொட்டுவிடவில்லை; சில படங்கள்
உள்ளூரைத் தாண்டவில்லை
படத்தின் ஓட்டம்
தலைப்பில் இல்லை
அந்தந்த மொழிப்படங்களுக்குத்
தாய்மொழியிலேயே
தலைப்பிடுவதே தகும்;
அவசியப் பட்டால் மட்டும்
ஆங்கிலத்தில் பெயர் சூட்டலாம்
ஆங்கிலப் படங்கள் எல்லாம்
தமிழ்ப் பெயர்களோடு
வெளிவரும்போது
தமிழ்ப்படங்கள்
ஆங்கிலப் பெயர்களோடு
வெளிவருவது காலக் கூத்து
தாய்மொழியில் பெயர் வைத்தால்
சந்தை மதிப்பு சரிந்துவிடாது
'ஆநிரை' என்ற தமிழ்த் தலைப்பு
சர்வதேசப் படவிழாவில்
மரியாதை பெற்றிருக்கிறதே!
ஆகவே கலை அன்பர்களே
அழகான தமிழ்ப் பெயர்களைச்
சூட்டுங்கள்
1970களில்
இந்திப் படங்களையெல்லாம்
நாம் இந்தித் தலைப்பில்தானே
உச்சரித்தோம்?
மற்ற மொழிக்காரர்கள்
தமிழ்ப்படங்களின் தலைப்புகளைத்
தமிழிலேயே உச்சரிக்கட்டுமே!
சிந்திக்க வேண்டும்
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
-
"எங்கே பாரதிராஜா? இனி நான் என்ன பதில் சொல்வேன்?” கதறிய வைரமுத்து... கண்கலங்க வைத்த இறுதி மரியாதை! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
சொந்த மண்ணை நோக்கி தொடங்கியது பாரதி ராஜாவின் இறுதி பயணம்! நாளை முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு -
"பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா" பேசுகிறேன்.. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மாபெரும் இயக்குநர் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications