கெட்டுப்போன இறைச்சி.. நீங்க சாப்பிடுவீங்களா.. கொந்தளித்த அதிகாரி.. கருட புராணம் தரும் தண்டனை
சென்னை: கெட்டுப்போன இறைச்சி, மீன், கோழிக்கறி என பல ஆயிரம் கிலோ விஷமான உணவுகளை ஹோட்டல்களில் இருந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். நாமக்கல் சிறுமியின் மரணத்திற்குப் பிறகுதான் அதிகாரிகள் விழித்துக்கொண்டுள்ளனர். விஷ உணவுகளை விற்பனை செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்திலும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் விரும்பி சாப்பிடும் உணவாக ஷவர்மா இருக்கிறது. சிக்கன் பர்கர், கிரில் சிக்கன், தந்தூரி என பலவகை உணவுகளை ஹோட்டலுக்கு போய் சாப்பிடுகின்றனர். ஆர்டர் செய்தும் அசைவ உணவுகளை ஆசை ஆசையாக சாப்பிடுகின்றனர்.

இந்நிலையில் நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது பள்ளி மாணவி உடல் நஅவர் உணவு விஷமாகியதின் காரணமாக இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களில் சுகாதாரத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில் பல கடைகளில் இருந்து பழைய உணவு பொருட்களை சுகாதாரத்துறையினர் கைப்பற்றினர்.
சென்னை, கோவை, மதுரை, திருப்பூர் என பல ஊர்களில் இருந்தும் கெட்டுப்போன உணவுகளை கண்டுபிடித்த அதிகாரிகள் அவற்றை அழித்துள்ளனர். சிவகங்கையில் உள்ள பல்வேறு உணவகங்களில் சுமார் 1000 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
50கிலோ கெட்டுப்போன உணவு, ஷவர்மா உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் குறிப்பிட்ட கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை, மாம்பலம் ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்களிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு கெட்டுப்போன இறைச்சி மீன் போன்றவற்றை அழித்துள்ளனர்.
ஏழை, எளிய மக்கள் முதற்கொண்டு பணக்காரர்கள் வரை பலரும் ஓட்டல்களில் சென்று உணவு சாப்பிடுவது வழக்கம். அவர்கள் தரும் பணத்திற்கு தரமான உணவு கிடைக்க வேண்டும் என்று நினைப்பர். ஆனால், சில நேரங்களில் சில நேரங்களில் அவர்கள் சாப்பிட்ட உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தி விடும்.
ஓட்டல் உணவுகளில் இதுபோன்று ஒவ்வாமை, அஜீரண கோளாறுகள், உடல் உபாதைகள் ஏற்படுவது சில ஓட்டல்களில் சுகாதாரமின்றி செய்யப்படும் முறையினால்தான். இந்த நிலையில், ஓட்டல்களில் சிலவற்றில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிப்பதை உணவுபாதுகாப்புத்துறை அதிகாரி வெளியிட்டு வருகிறார்.
சென்னையில் உள்ள விருதுநகர் அய்யனார் ஓட்டலுக்குச் சென்று சோதனையிட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ''அங்குள்ள பிரீசரைப் பார்த்து, கெட்ட வாடை வருதே...கெட்டுப்போனதை வைச்சிருக்கீங்களா....இதெல்லாம் மனுசந்தான திங்கறான்..இப்படித்தான் வைச்சிருப்பீங்களா, எல்லாரும் 100 கிலோ மீட்டர் 500கிமீ தூரம் பயணம் செய்து சாப்பிட்ட வர்றாங்க..இப்படித்தான் இதை வைச்சிருப்பீங்களா.....இவ்ளோ ஈக்கள் இருந்தால் வாந்தி, பேதி ஏன் வராது ?'' உங்களுக்கு மனசே இல்லையா என்று கேட்டார். மேலும், சில உணவுகளை எடுத்து தட்டில் போட்டு இதை நீங்களே சாப்பிடுங்கள் என்று கூறினார். இதைப் பார்த்து அதிர்ச்சியான ஹோட்டல் உரிமையாளர், எதோ சொல்லி சமாளிக்க முயன்றார்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத்தலின்பேரில், திருப்பூா் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையில், மாவட்டத்தில் உள்ள சவா்மா தயாரித்து விற்பனை செய்யும் உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து அசைவ உணவகங்க ளிலும் அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா். இதில் அதிக செயற்கை நிறமிகள் சோ்க்கப்பட்ட, கெட்டுப்போன கோழி இறைச்சி சுமாா் 16 கிலோ, கெட்டுப் போன மீன் இறைச்சி 3.5 கிலோ, காலாவதி ஆகி பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த சுமாா் 750 கிராம் மயோனிஸ் ஆகியவை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
இன்றைய சூழ்நிலையில் வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை ஹோட்டலுக்கு போய் குடும்பத்தோடு சாப்பிட ஆசைப்படுகின்றனர். பணம் கொடுத்து சாப்பிட்டாலும் அந்த உணவு தரமானதாக இருப்பதில்லை. விஷமான உணவை, கெட்டுப்போன உணவை காசுக்காக விற்பனை செய்பவர்களுக்கு கருட புராணத்தில் தண்டனை கூறப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு கொடூர தண்டனையை இப்பிறவியில் அனுபவிக்காவிட்டாலும் நரகத்தில் கண்டிப்பாக கிடைக்கத்தான் செய்யும்.
பாவம், புண்ணியம் எதையும் கண்டுகொள்ளாமல் காசுக்காக எதையும் செய்பவர்கள் சான்மலி' நரகத்தை அடைவார்கள். இங்கு முள் தடிகளாலும், முள் செடிகளாலும் குத்தப்பட்டு துன்பப்படுவார்கள் என்று கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. உணவில் விஷம் வைப்பவர்களுக்கு கும்பிபாகம் தண்டனை கிடைக்கும்.' இங்கு எண்ணெய்க் கொப்பரையில் ஆன்மாக்கள் வாட்டி எடுக்கப்படும். அதைத்தான் அந்நியன் படத்தில் சங்கர் கூறியிருப்பார். எத்தனை படங்கள் எடுத்தாலும் என்னதான் தண்டனை கிடைத்தாலும் இன்னும் சில நாட்களில் இதனை மறந்து விட்டு மீண்டும் தங்களின் வேலையை காட்ட ஆரம்பித்து விடுவார்கள் ஹோட்டல் உரிமையாளர்கள்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications