Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தான் கெட்டது பத்தாது மகளையுமா? கள்ளக்காதலனால் 17 வயது மகளுக்கு பிரசவம்! உறைய வைத்த ‘புவனேஷ்வரி’

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னையில் தான் கெட்டதோடு மட்டுமல்லாது பதினேழு வயது மகளையும் கள்ளக்காதலனுடன் தவறாக பழகவிட்டதோடு, அவர் கர்ப்பமான நிலையில் காவல்துறையினருக்கு பயந்து தனது கர்ப்பிணி மகளுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த கொடூர தாயை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை ஓட்டேரியை பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவரது கணவர் பாரதி 6 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதனால், புவனேஸ்வரி தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவரது மகளுக்கு 17 வயது ஆனபோது, ஓட்டேரி முத்துக்குமார் என்பவருடன் புவனேஸ்வரிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. முத்துக்குமாரும் ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.

சென்னையில் அதிர்ச்சி

சென்னையில் அதிர்ச்சி

இருந்த போதிலும் முத்துக்குமார் தன் 3 பிள்ளைகளை விட்டுவிட்டு புவனேஸ்வரியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், முத்துக்குமார் புவனேஸ்வரி உடன் உல்லாசமாக இருந்தது போதாதென்று அவரது மகள் மீதும் தனக்கு ஆசை இருக்கிறது என்று கூறியுள்ளார். இதற்கு கொடூர தாய் புவனேஸ்வரியும் சம்மதம் தெரிவித்ததால் ஒரு வருடமாக முத்துக்குமாருடன் மகளை உல்லாசமாக இருக்க அனுமதித்துள்ளார்.இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் சிறுமியின் வயது மற்றும் கர்ப்பம் பற்றிய விவரம் தெரியவரும் மேலும் தாம் போலீசில் மாட்டிக் கொள்வோம் என்றும் பயந்துள்ளார்.

கொடூர மனம் கொண்ட தாய்

கொடூர மனம் கொண்ட தாய்

இதனால், கர்ப்பிணி மகளுக்கு அவரே வீட்டில் வைத்து பிரசவம் பார்க்க முடிவெடுத்துள்ளார். இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் புவனேஸ்வரி போலீஸ் பயத்தில் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். அந்த சிறுமிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. 2 நாட்கள் கழிந்த நிலையில் குழந்தையின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. உடனே ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்கு குழந்தையை புவனேஸ்வரியும், முத்துகுமாரும் கொண்டு சென்றனர். அங்கிருந்த செவிலியர்கள், குழந்தை எங்கு பிறந்தது, குழந்தையின் பெற்றோர் யார்' என கேட்டுள்ளனர்.

வசமாய் சிக்கினர்

வசமாய் சிக்கினர்

அதற்கு அவர்கள், குழந்தையின் தாய்க்கு 19 வயதாகிறது' என்றுள்ளனர்.இதையடுத்து, ஆதார் கார்டு கொடுங்கள். அந்த எண்ணை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு முறையும் வரும்போது உங்களுக்கான சலுகைகள் கிடைக்கும்' என்று செவிலியர்கள் கூறியுள்ளனர். சிறுமியின் ஆதார் கார்டை புவனேஸ்வரி கொடுத்துள்ளார். அப்போது, சிறுமிக்கு 17 வயதுதான் ஆகிறது என்பது தெரியவந்தது. உடனே சிறுமியின் தந்தை யார் என கேட்டபோது முத்துக்குமார் என்று புவனேஸ்வரி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம், உடனடியாக குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர்.

அதிரடி கைது

அதிரடி கைது

அதன்பேரில் குழந்தைகள் நல அமைப்பினர் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்படி இன்ஸ்பெக்டர் கோமதி தீவிரமாக விசாரித்தார். இதை அறிந்ததும் புவனேஸ்வரியும் தலைமறைவாகி விட்டார். முத்துக்குமார் பொன்னேறியில் கைது செய்ய பட்டார். இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர் . தலைமறைவாகியுள்ள சிறுமியின் தாயாரான புவனேஸ்வரியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பெற்ற மகளையே கள்ளக்காதலனுக்கு ஒரு வருடமாக விருந்தாக்கி, பிறந்த குழந்தையையும் மறைத்த தாயின் செயல் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+