ஷாப்பிங் மாலில் கணவரின் கள்ளக்காதலி மீது தாக்குதல்.. முன்னாள் டிஜிபி திலகவதியின் மருமகள் கைது
சென்னை: சென்னையில் ஒரு வணிக வளாகத்தில் தனது கணவரின் கள்ளக்காதலி என சொல்லப்படும் இந்திரா என்பவரை திலகவதி ஐபிஎஸ்ஸின் மருமகள் சுருதி கடுமையாக தாக்கியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
தமிழக காவல் துறையின் முன்னாள் டிஜிபியாக இருந்தவர் திலகவதி ஐபிஎஸ். இவரது மகன் பிரபு திலக். இவர் மருத்துவர். அரியலூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி சுருதி. இவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வருகிறார். இவர் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகாரை கொடுத்துள்ளார். அந்த புகாரில் தனது கணவர் திலக், மாமியார் திலகவதி மீது பரபரப்பு புகாரை கூறியுள்ளார். அந்த புகாரில், எனது பெயர் சுருதி, எனக்கு 42 வயதாகிறது.

திலக்
கடந்த 2007ஆம் ஆண்டு எனக்கும் திலக்கிற்கும் திருமணம் நடந்தது. எங்களுக்கு 14 வயதில் மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர். ஆரம்ப காலத்தில் எங்களுக்குள் உறவானது சுமூகமாக போனது. ஆனால் போக போக என் கணவர் என்னை துன்புறுத்த தொடங்கிவிட்டார்.

கணவர் கொடுமை
இன்று வரை எனது கணவர் கொடுமைப்படுத்தினாலும் அதை என் குழந்தைகளுக்காகவே தாக்குப்பிடித்து கொண்டிருந்தேன். எனது திருமணத்திற்கு 170 பவுன் நகையும் 1 கோடி ரூபாய் பணமும் எனது தாய் வீட்டில் சீதனமாக கொடுக்கப்பட்டது. ஆனால் எனது கணவரோ இதுவும் போதாது, எனகூறி தினமும் குடித்துவிட்டு என்னை துன்புறுத்துகிறார்.

மாமியார் திலகவதி மிரட்டல்
எனது மாமியார் திலகவதியும் என்னை மிரட்டுகிறார். இதுமட்டுமல்லாமல் என் கணவர் பணியாற்றும் கல்லூரியில் பெண் டாக்டர் இந்திரா பிரியதர்ஷினி என்பவருடன் கள்ளக்காதல் இருந்து வருகிறது. இதை தட்டிகேட்டால் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என புகார் கொடுத்துள்ளார்.

பெண் மீது கடும் தாக்குதல்
இந்த நிலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு மாலில் இந்திராவும் பிரவும் பேசிக் கொண்டிருப்பதை அறிந்த சுருதி , நேராக தனது தந்தை உள்ளிட்டோருடன் அங்கு சென்றார். அப்போது இந்திராவிடம் அவதூறாக பேசியதுடன் அவரை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக வீடியோவும் வெளியானது. இதில் இந்திராவுக்கு உடல் முழுவதும் கீரல்களும் காயங்களும் ஏற்பட்டன. இது தொடர்பாக இந்திரா கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் போலீஸார் சுருதியை கைது செய்தனர். மேலும் பதிலுக்கு சுருதி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் இந்திரா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications