மாமியாரை கழுத்தறுத்து கொன்ற சுஜாதா - திருக்கழுங்குன்றத்தில் முகாமிட்ட பீகார் கொலையாளிகள் எங்கே?
குடும்பத் தகராறில் மாமியாரை ஆள் வைத்து கொன்ற மருமகளை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். தப்பி ஓடிய உறவினர்களை 3 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு: மாமியாரை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு நகை திருட்டு நாடகமாடிய மருமகளை காவல்துறையினர் கை செய்தனர். மாடியில் இருந்து குதித்து தப்ப முயன்றதால் கால் ஓடிந்து போலீசில் வசமாக சிக்கிக்கொண்டார் கொலைகார மருமகள். கொலை செய்ய உதவிய உறவினர்களை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் பிரேம்கன்வர்,வயது 72. இவர் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் பத்தேசந்த்,78 என்பவரின் மனைவியாவார்.
இவர்களுக்கு கணபதிலால், சுண்ணிலால், பிண்டு குமார், கமலேஷ் குமார், ஆகிய 4 மகன்கள் உள்ளனர்.
திருக்கழுக்குன்றத்தில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர்.

கழுத்தறுத்துக்கொலை
பத்தேசந்த் வழக்கம் போல் கடந்த ஞாயிறன்று மாலை கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முதல் தளத்தில் உள்ள அறையில் மனைவி பிரேம்கன்வர் கழுத்து அறுபட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

போலீஸ் விசாரணை
திருக்கழுக்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் இறந்த கிடந்த பிரேம் கன்வரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருமகளுக்கு காலில் அடி
அதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர். அருகில் உள்ள அக்கம்பக்கத்தினரிடம் கிடைத்த ஆதாரங்களை வைத்து விசாரித்தபோது இறந்தவரின் மருமகள் காலில் அடிபட்டு விழுந்ததால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்தனர்.

மருமகள் கைது
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இறந்தவரின் மூன்றாவது மகனான பிண்டு குமாரின் மனைவி சுஜாதாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். முதலில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

கொலை செய்ய திட்டம் போட்ட சுஜாதா
சுஜாதா அளித்த வாக்குமூலம் காவல்துறையினரையே அதிர்ச்சியடைய வைத்தது. திருமணமாகி சில மாதங்களில் இருந்து சுஜாதாவுக்கும் மாமியாருக்கும் அடிக்கடி வாக்குவாதம் வருமாம். இதில் பலமுறை இருவரும் சண்டை போட்டு கொண்டனர். தனது நிம்மதியை கெடுக்கும் மாமியாரை கொலை செய்ய வேண்டும் என முடிவு செய்தாராம் சுஜாதா.

பீகார் மாமாக்கள்
மாமியாரை கொலை செய்வதற்காக பீகார் மாநிலத்தில் இருந்து தனது மாமாக்கள் சுபிர், தீபக், ஆகியோரை வரவழைத்து இரண்டு நாட்கள் வீட்டில் தங்க வைத்தார் சுஜாதா. ஆள் இல்லாத சமயம் பார்த்து மூவரும் மாமியாரை கத்தியால் கழுத்தில் குத்தி பிறகு கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.

கால் உடைந்தது
கொலை செய்து விட்டு மாடியில் இருந்து தப்பி செல்ல முயன்ற போது கால் தவறி மாடியின் மேல் இருந்து கீழே விழுந்தார் சுஜாதா. இதில் அவரது கால் உடைந்தது. இதனை அடுத்து ஓட முடியாமல் போகவே அக்கம்பக்கத்தினரை சத்தம் போட்டு வரவழைத்து திருடர்கள் சிலர் நகையை திருடிவிட்டு மாமியாரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடுகிறார்கள் அவர்களை பிடிங்க என சத்தம் போட்டதாக கூறினார் சுஜாதா.

பீகார் கொலையாளிகள் எங்கே
மாமியாரை திட்டமிட்டு கொலை செய்த வழக்கில் வழக்குப்பதிவு செய்து சுஜாதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பிச்சென்ற சுஜாதாவின் மாமாக்களான இரண்டு கொலையாளிகளையும் செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் சுகுணா சிங் உத்தரவின் பெயரில் திருக்கழுக்குன்றம் காவல்துறை ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையில் மூன்று சிறப்பு படை அமைத்து தேடி வருகின்றனர். குடும்ப தகராறில் மருமகளே மாமியாரை ஆள் வைத்து கொலை செய்த சம்பவம் திருக்கழுங்குன்றத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications