போலீஸ் வாகனத்திலேயே சம்பவம் செய்த ‘பலே திருடன்’.. அலேக்காக தூக்கிய போலீசார் - சிக்கியது எப்படி?
சென்னை : போலீஸ் ரோந்து வாகனத்தில் இருந்த ட்ராக்கிங் மொபைல் போனை 'அடித்துச் சென்ற' வழிப்பறி திருடன் கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்கு சென்றுவிட்டுத் திரும்பியபோது ரோந்து வாகனத்தில் வைத்திருந்த ட்ராக்கிங் மொபைல் போனை திருடிய வழிப்பறி ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
அந்த நபர் மீது காவல் நிலையங்களில் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் இருக்கும் விவரம் தெரியவந்துள்ளது. அதனால் போலீசாரை பழிவாங்க இந்த திருட்டை நடத்தியதாக கூறப்படுகிறது.

விசாரணைக்கு சென்ற போலீஸ்
சென்னை புதுவண்ணாரப்பேட்டை இருசப்பன் மேஸ்திரி 2வது தெருவில் குடும்ப பிரச்சனை காரணமாக சண்டை ஏற்படுவதாக நேற்று அதிகாலை புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் எஸ்.ஐ நரசிம்மன், ரோந்து வாகன டிரைவர் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

ஆட்டையப்போட்ட திருடன்
விசாரணையை முடித்துபிட்டு ரோந்து வாகனத்தில் காவல் நிலையம் வந்தனர். அப்போது, வாகனத்தில் வைத்திருந்த ட்ராக்கிங் மொபைல் போன் திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் எஸ்.ஐ நரசிம்மன் புகார் செய்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் வானமாமலை வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது வாலிபர் ஒருவர் ட்ராக்கிங் மொபைல் போனை திருடிச் சென்றது தெரியவந்தது.

வழிப்பறி ஆசாமி
இதையடுத்து புதுவண்ணாரப்பேட்டை வெங்கடேஷ் தெருவை சேர்ந்த ஆகாஷ் (20) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ட்ராக்கிங் மொபைல் போனை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆகாஷ் மீது புதுவண்ணாரப்பேட்டை, ஆர்.கே.நகர் காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.

பலே திருடன்
கைது செய்யப்பட்ட ஆகாஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். போலீசாரை பழிவாங்குவதற்காக போலீஸ் வாகனத்தில் இருந்த மொபைல் போனை திருடியதாக கூறப்படுகிறது. போலீஸ் வாகனத்திலேயே தனது கைவரிசையைக் காட்டிய திருடன் சிசிடிவி கேமரா உதவியுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னை போலீஸ் வட்டாரங்களில் பேசுபொருளாகி உள்ளது.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications