கதவைத் தட்டிய போலீஸ்.. நள்ளிரவில் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டில் நடந்தது என்ன?
Recommended Video

சென்னை: நள்ளிரவில் வந்து போலீசார் தனது வீட்டு கதவை தட்டினார்கள் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
சர்கார் திரைப்படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் ஆளும் கட்சியினருக்கு எதிராக சில காட்சிகள் இருப்பதாகவும், அரசு கொடுத்த இலவச பொருட்களை தீயிலிட்டு எரிப்பது போன்ற காட்சிகளை வைத்துள்ளதாகவும், அப்படத்தின் இயக்குனர் முருகதாஸுக்கு எதிராக அதிமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று கோரி மாநிலம் தழுவிய அளவில் நேற்று அதிமுகவினர் போராட்டங்களை நடத்தினார்.
படக்குழுவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் சண்முகம், மாநில தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் உடன் நேற்று திடீர் ஆலோசனை நடத்தியிருந்தார்.
இந்த நிலையில்தான் நேற்று இரவு முருகதாசை கைது செய்ய போலீசார் அவரது வீட்டுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகின.
Police had come to my house late tonight and banged the door several times.Since I was not there they left the premises. Right now I was told there is no police outside my house.
— A.R.Murugadoss (@ARMurugadoss) November 8, 2018
இந்த தகவலை முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். நள்ளிரவில் போலீசார் தனது வீட்டுக்கு வந்து கதவை பலமுறை தட்டியதாகவும், தான் வீட்டில் இல்லை என்பதால் அவர்கள் திரும்பி சென்று விட்டதாகவும், தற்போது தனது வீட்டுக்கு வெளியே போலீசார் இல்லை என்றும் அந்த டுவீட்டில் அவர் தெரிவித்துள்ளார்.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications