'சேரி மொழி' என இழிவுபடுத்திய குஷ்பு- வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் 'உள்ளே' தள்ளுங்க..போலீசில் புகார்!
சென்னை: சேரி மொழி என தலித் மக்களின் மொழியை தீண்டத்தகாத மொழியாக இழிவுபடுத்திய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜக நடிகையுமான குஷ்பு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீசில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி கார்த்திக் புகார் கொடுத்துள்ளார்.
நடிகை திரிஷா (த்ரிஷா) குறித்து நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த சில கருத்துகள் பெரும் சர்ச்சையாக வெடித்தன. லியோ திரைப்படத்தை முன்வைத்து இந்த கருத்துகளை மன்சூர் அலிகான் தெரிவித்திருந்தார்.

மன்சூர் அலிகானின் கருத்துக்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து திரைத்துறையினர் பலரும் மன்சூர் அலி கானுக்கு எதிரான கண்டனங்களைக் குவித்தனர். ஆனால் தாம் பேசியதில் தவறில்லை என மன்சூர் அலி கான் முதலில் விளக்கம் தந்திருந்தார். இந்த விவகாரத்தில் நடிகை குஷ்பு களமிறங்கி தமது எக்ஸ் பக்கத்தில் ஆக்ரோஷமாக பதிவிட்டார். பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் இருப்பதா அதிகமாக ஆவேசப்பட்டார். இது தொடர்பான எக்ஸ் பதிவு ஒன்றில் 'சேரி மொழி' எனவும் குறிப்பிட்டிருந்தார். இது புதிய சர்ச்சையாக வெடித்தது.
சேரி என்பதும் சேரி மொழி என்பதும் இந்த மண்ணின் பூர்வகுடி மக்கள் வாழ்விடத்தையும் மொழியையும் குறிப்பிடுவது. அப்படியானால் தமிழ் மண்ணின் பூர்வகுடி மக்களின் மொழியை சேரி மொழி என கொச்சைப்படுத்துவதா? இழிவுபடுத்துவதா? என குஷ்புவுக்கு கண்டனங்கள் வெடித்தன. இந்த விவகாரத்தில் விளக்கம் தருவதாக மற்றொரு பதிவிட்ட நடிகை குஷ்பு சேரி என்றால் பிரெஞ்ச் மொழியில் அன்பு என குறிப்பிட இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவிட்டது. நடிகை குஷ்புவுக்கு எதிராக காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் வரிந்து கட்டி நிற்கின்றன.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கார்த்திக் என்பவர் சென்னை போலீசில் பாஜக நடிகை குஷ்புவுக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார். அதில், சேரி மொழி என தாழ்த்தப்பட்ட மக்களின் மொழியை இழிவுபடுத்தி, தீண்டத்தாகத மொழியாக கேவலப்படுத்தி உள்ளார். ஆகையால் பாஜக நடிகை குஷ்பு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிகவின் கார்த்திக் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications